சமய நம்பிக்கைச் சுதந்திரம் தொடர்பான ஐ நா சபையின் விஷே‪ட அறிக்கையாளர் அஹமட் சஹீத் மட்டக்களப்பிற்கு விஜயம்

(சதீஸ்)
 
சமயம் மற்றும் நம்பிக்கைச் சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விஷே‪ட அறிக்கையாளர் அஹமட் சஹீத்  திங்கட்கிழமை 19.08.2019 மட்டக்களப்பிற்கு விஜயம்  மேற்கொண்டு அங்குள்ள மாவட்ட சர்வமத பிரதிநிதிகளைச் சந்தித்துள்ளார்.
 
மட்டக்களப்பில் அமைந்துள்ள  யுனிசெப் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வ மதப் பேரவைக்கான இணைப்பாளர் இராசையா மனோகரன் உட்பட பேரவையின் உறுப்பினர்கள் சிலரும் ஐநா அதிகாரிகளும் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர்.
 
மாவட்ட சர்வமதப் பிரமுகர்களைச் சந்தித்த ஐக்கிய நாடுகள் சபையின் விஷே‪ட அறிக்கையாளர் அஹமட் சஹீத், மாவட்டத்தில் சமயங்களைப் பின்பற்றுவதிலும் அனுஷ்டானங்களுக்காக ஒன்று கூடுவதிலுமுள்ள சுதந்திர மீறல்களைப் பற்றிக் கேட்டறிந்து கொண்டார்.
 
 
 
இங்கு கலந்துரையாடலில் பங்குபற்றிய பல்சமயப் பிரதிநிதிகள் தமது சமய அனுஷ்டானங்களின்போது ஏற்படுத்தப்படும் சமய சுதந்திரத்தை மீறும் செயற்பாடுகளையும் இன சமய வெறுப்பு நடவடிக்கைகளையும் எடுத்துக் கூறினர்.
 
இது குறித்து கருத்து வெளியிட்ட ஐநா விஷேட அறிக்கையாளர், இந்த விவகாரங்கள் பற்றி தான் இலங்கை அரசின் கவனத்திற்குக் கொண்டு வருவதோடு அடுத்தாண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் சமய சுதந்திரம் மீறப்படுவதாக பல்சமயப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டிய விடயங்களை அறிக்கையிடப் போவதாகவும் தெரிவித்தார்.

Related posts