சம்மாந்துறையில் விவசாய இரசாயன விற்பனை நிலையங்கள் சுற்றிவளைப்பு

 

 
கடந்த சில வாரங்களாக அம்பாறை மாவட்டத்தின் பெரும்போக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டத்திலிருந்து அனுமதிப்பத்திரமின்றி  பல விவசாய இரசாயன நிலையங்கள் சட்டவிரோதமாக ஆரம்பிக்கப்படிருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கிணங்க  கடந்த திங்கட்கிழமை (23) சம்மாந்துறை பிரதேச எல்லைக்குட்பட்ட சுற்றிவளைக்கப்பட்டதுடன் அவர்களுக்கு முதற்கட்டமாக எழுத்து மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டு உடனடியாக இவ் விற்பனை நிலையங்களை மூடுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
 
இச் சுற்றுவளைப்பில் அம்பாறை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளரும் பீடைகொல்லி கட்டுப்பாட்டு சட்டத்தின் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தருமான எம்.எப்.ஏ சனீர்,பாட விதான உத்தியோகத்தகர்களான எ.ஐ.எ பிரோஸ்,எ.ஜெய்லாப்தீன்,
சம்மாந்துறை விவசாய விரிவாக்கல் நிலைய பொறுப்பதிகாரி விவசாய போதனாசிரியரும் வழக்கு செயற்பாடுகளை பொறுப்பேற்று வழிநடத்தும் அதிகாரியுமான ஐ.எல்.எ பெளசுல் அமீன்,மல்வத்தை விவசாய விரிவாக்கல் நிலைய பொறுப்பதிகாரி எ.டி.எ கரீம் மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தரும் கலந்து கொண்டனர்.
 
மேலும் அனுமதிப்பத்திரமின்றி நிலையங்களுக்கு இனிமேல் எச்சரிக்கை ஏதுமின்றி 1980ஆம் ஆண்டு 33ஆம் இலக்க பீடைகொல்லிகள் கட்டுப்பாட்டுச்சட்டம் மற்றும் 1994 ஆம் ஆண்டு 6ஆம் இலக்க பீடை நாசினிகள் திருத்தச்சட்டம் 2011ஆம் ஆண்டு
31 இலக்க பீடைகொல்லி திருத்தச்சட்டத்திற்கமைவாக வழக்கு தொடரப்படும் என்று அம்பாறை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளரும் பீடைகொல்லி கட்டுப்பாட்டு சட்டத்தின் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தருமான எம்.எப்.ஏ சனீர் தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில் விவசாய இரசாயன  விற்பனை நிலையமென்றை நடாத்திச் செல்லும் போது ஒவ்வொருவரும் முறையான பயிற்சி சான்றிதழுடன் அனுமதிப்பத்திரமும் இருப்பதும் அவசியமாகும் எனவும் குறிப்பிட்டார்.

Related posts