சல்வீனியா தாக்கத்தால் மீன்பிடி பாதிப்பு

இலங்கையில் இரண்டாவது மிகப் பெரிய வாவியாக விளங்கும் மட்டக்களப்பு வாவி, சல்வீனியா தாக்கத்தால் பெரிதும் பாதிப்படைந்து காணப்படுகின்றது.

இதனால், அப்பகுதி மீனவர்கள், மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் பெரிதும் இன்னல்களைச் சந்திக்க நேரிட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் தற்பொழுது வீசி வரும் பலத்த காற்று மற்றும் சல்வீனியா தாவரத்தின் பரவல் காரணமாக, மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு படகு மூலம் போக்குவரத்தை மேற்கொள்ளுவதற்கு மிகவும் சிரமத்தை எதிர்கொள்ளுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு, மீனவர்களது மீன்பிடி கூடைகளும் வலைகளும் வாவியில் சிக்கிக்கொள்வதாகவும் இதனால் மீன்பிடி நடவடிக்கைகளின் போது அதிகளவிலான அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்ததோடு, முதலைகளின் அச்சுறுத்தல்களுக்கும் அவ்வப்போது முகங்கொடுக்க நேரிடுவதாகவும் மேலும் தெரிவிக்கின்றனர்.

எனவே, அதிகாரிகள் இது தொடர்பிலான உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், குறித்த வாவியைச் சுத்தம் செய்து தருமாறும் மீனவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Related posts