சவுதியில் உயிரிழந்த மட்டக்களப்பு இளைஞரின் உடலை நாட்டிற்குக் கொண்டுவருவதில் சிக்கல்

மட்டக்களப்பு – இளுப்படிச்சேனை கன்னங்குடா பகுதியிலிருந்து சவுதி அரேபியாவிற்குச் சென்று, உயிரிழந்த இளைஞரின் பூதவுடலை நாட்டிற்குக் கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கன்னங்குடா பகுதியைச் சேர்ந்த 28 வயதான கணபதிப்பிள்ளை கோமலன் என்ற இளைஞர் கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி சவுதியில் உயிரிழந்துள்ளார்.

எனினும், இவரின் பூதவுடலை இலங்கைக்கு அனுப்பிவைக்கவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபரின் பூதவுடலை நாட்டிற்குக் கொண்டுவருவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சிடம்  வினவியபோது, கணபதிப்பிள்ளை கோமலன் பணிபுரிந்த நிறுவனத்தால் அவருக்கான சம்பளக் கொடுப்பனவுகள் இதுவரை செலுத்தப்படாமையாலேயே இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

கொடுப்பனவில் காணப்படும் சிக்கல்கள் நிவர்த்திக்கப்பட்டு விரைவில் பூதவுடலை நாட்டிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் குறித்த பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts