சுயநலவாத அரசியல்வாதிகளின் சூழ்ச்சியினால்தான் தமிழ் முஸ்லிம் சமூகங்களைப் பிரித்தாள்கின்றனர்

சுயநலவாத அரசியல்வாதிகளின் சூழ்ச்சியினால்தான் தமிழ் முஸ்லிம் சமூகங்களைப் பிரித்தாள்கின்றனர் இவ்வாறனவர்களின் சூழ்ச்சிக்குள்  இரு சமூகங்களும் அகப்படக் கூடாது என கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.ஏ.அஸீஸ் தெரிவித்தார்

 தனது ஆதரவாளர்கள் மத்தியில் தனது அலுவலகத்தில் சந்தித்துப் பேசும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் மேலும் பேசுகையில் 

கல்முனையில் இரு சமூகங்களும் இணைந்து வழவேண்டிய இடம் இரு சமூகம் மற்றைய சமூகத்தை அங்கிகரித்து மதங்களை மதித்து வாழ்ந்தால் இரு சமூகங்களும் ஒன்றாக வாழ முடியும், நிருவாக அலகுகளை பிரிக்கலாம், பிரதேச எல்லைகளை ஏற்படுத்தலாம், சந்தோசமாக வாழலாம். ஆனால் இன்று இந்த இரு சமூகங்களும் நாம் வாழும் பிரதேசம் எமக்குமட்டுமே சொந்தமானது இதில் மற்றைய சமூகத்திற்கு இடமில்லை, அனுமதிக்கமாட்டோம். எங்களினங்களை நாங்களே நிருவகிக்கவேண்டும். என சுய நல அரசியல் வாதிகளால் போடப்பட்ட சிந்தனைகளுக்குள் அகப்பட்டுள்ளனர்.

கொழும்பை எடுத்துப்பாருங்கள் அங்கே யாரும் நிருவா எல்லைகளையோ, பிரதேச எல்லைகளை தமது சமூகத்திற்கு என தனியாக கோருவதில்லை. அதை அரச நிருவாகமே தீர்மானிக்கின்றது. அதை அந்த மூவின சமூகமும் ஏற்று வாழ்கின்றன. அங்கே பிரதேச செயலக எல்லைகள், பிரசேச சபை எல்லைகள் மக்களால் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. கல்முனை நகரமும் அப்படித்தான்.

 தென் கிழக்கின் தலைநகரமாக மாறிவருகின்ற ஒருநகரம் கல்முனை . இந்த நகரம் மாற்று மதங்களையும், சமூகங்ளையும் அங்கீகரிக்கின்ற போதுதான். அங்கே நகரத்திற்கான சிறப்பியல்புகள் உருவாக முடியும். அப்போது சமாதானமும், புரிந்துணர்வும், அமைதியும் நிலவுகின்ற நகரமாக பரினமிக்கும். இங்கு மாற்று சமூகத்தினரும், தொழில் அதிபர்களும், பொருளாதார நிபுணர்களும், முதலீட்டாளர்களும் வந்து குடியேறுவார்கள் இதனால் வியாபாரம் பெருகும். நகரம் துரிதமாக மாறிச்செல்லும். 

இதை புரிந்துகொள்ள முடியாத, தூரநோக்குச் சிந்தனை இல்லாத இன்றை சுயநல குறுகிய சிந்தனைகொண்ட அரசியல் வாதிகள் மக்களை இன, பிரதேச ரீதியாக பிரித்து எல்லை போட நினைக்கின்றார்கள், இது இவர்களின் அறியாமையை காட்டுகின்றது. கல்முனையை ஏதோ ஒரு அடிப்படையில் பிரதேச எல்லைகளை வைத்துப் பிரிக்கின்றபோது அதில் ஒரு பகுதி தழிழர்கள் வாழ்கின்ற பிரதேசம், முஸ்லீம்களின் நிருவாக அலகுக்குள் போவதை அவர்கள் விரும்பவில்லை. அதேபோல தமிழ் நிருவா, பிரதேச எல்லைக்குள் முஸ்லீம்கள்  வாழுகின்ற  பிரதேசங்கள் போகின்றபோது அதை அவர்கள் விரும்பவில்லை. காரணம் இது எங்கள் இடம், எங்கள் மதம், எங்கள் இனத்துக்குச் சொந்தமானது மட்டுந் தான், இதில் நாங்கள் மட்டும்தான் வாழவேண்டும் எங்களை நாங்களே நிருவகிக்க வேண்டும் என பிளவுபடும்போது நிருவாக ரீதியாக பாதிக்கப்படுகின்றார்கள். 

நாளை வருகின்ற சமூகம் முக்கியமாக ஒருவரையொருவர் புரிந்துவாழுகின்ற சமூகமாகத்தான் வாழப்போகின்றார்கள். எல்லைககள் அவர்களுக்குள் இருக்காது சிறப்பான நிருவாகம் இருக்கும் அதுதான் மனித, இன வாளர்ச்சி, நாகரீக வளர்ச்சியின் முன்னேற்றம். இதை இன்று நாம ;எம்மைவிட வளர்ந்த நகரங்களிலும், வளர்ச்சியடைந்த நாடுகளிலும் காணுகின்றோம். இந்த அமைதியை அபிருத்தியை, புரிந்துணர்வை இன்று ஏற்படுத்துங்கள் என்றுதான் நாம் கூறுகின்றோம். இதை இரண்டு சமூகமும் புரிந்துகொள்ள வேண்டும்;. புரிந்துகொண்டால் விட்டுக்கொடுத்தால், அங்கிகரித்தால் இப்பிரச்சனைக்கு தீர்வு இருக்கின்றது. சந்தோசமாக வாழலாம். 

சாய்ந்தமருது நகரசரபைக்கோரிக்கை இந்த அடிப்படையில்தான் முன்வைக்கின்றோம். நாம் எமது பிரதேச நிருவாகத்தை சிறப்பாக நடாhத்திச்செல்லவும், எமது மக்களுக்கும் கல்முனை மக்களுக்கும் சிறப்பான சேவைகளை வழங்கவும் சாய்ந்தமருது தனியாக பிரிக்கப்படவேண்டும் என்கின்றோம். இப்படி நிருவாகம் பரவலாக்கப்படுவதால் எங்களை விட கல்முனை மக்களே கூடுதலான நன்மையடைகின்றார்கள். நாம் நகரசபையாக பிரிந்துசெல்ல அத்தனை தகுதிகளையும் கொண்டுள்ளோம். எல்லை சனத்தொகை, வருமானம், அரச நிறுவனங்கள், பிரதேச செயலகம் என அனைத்தும் இருக்கின்றன. 

எமது நிருவாகத்தை சிறப்பாக நடாத்திச்செல்ல நாம் விரும்புகின்றோம், நாம் இதற்கு போராடவேண்டியதில்லை உண்மையான மக்கள் நலன் விரும்பும் மக்களில் வாழ்க்கையை முன்னேற்ற விரும்பும், சுமையை குறைக்க விரும்பும் இந்தப் பிரதேசத்திற்கான அரசியல்வாதிதான் முன்னிற்று இதை செய்யவேண்டும். ஆனால் இன்றுள்ள அரசியல்வாதி தனது சுயநலனுக்காக மக்கள் மத்தியில் பிரசே வாதத்தை தூண்டி அதில் குளிர்காய்கின்றார். கல்முனையை பிரித்தால் முஸ்லீம் சமூகம் அழிந்துபோகும் என்றும், இரத்த ஆறுஓடும் என்றும் இப் பிரச்சைனைக்கு தீர்வுகாண விரும்புகின்ற அரசியல் தலைமைகளை விரட்டுகின்றார். இது சாய்ந்தமருது மக்களுக்கு செய்கின்ற துரோகமாகும்.

சாய்ந்தமருது நகரசபை தொடர்பாக இது வரை நாம் கிட்டத்தட்ட 50 தடவைகள் அரசியில் கட்சித தலைவர்களையும், அமைச்சர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்துள்ளோம். ஒவ்வொரு சந்திப்புக்களும் எங்களை ஏமாற்றுகின்ற வாக்குறுதிகளாகவே இருந்தன. கடந்த பொதுத்தேர்தல்; தொடங்கி அடுத்த பொதுத்தேர்தல் வரப்போகிறது இன்றுவரை ஏமாற்றுகின்றார்கள், பொய் வாக்குறுதிகளை வழங்குகின்றார்கள். இனி நாம் ஏமாற மாட்டோம். எங்கள் ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்து என்ற ஒரு தீர்மானத்தை எடுப்போம் என்று எங்களை கேட்கின்றர்கள். நாங்கள் இது சம்மந்தமாக ஒன்று சேருவோம், ஒரு தீர்க்கமான முடிவினை எடுப்போம் அது எங்களை ஏமாற்றுகின்ற அரசியல்கட்சிகளுக்கு ஒரு பாடமாக இருக்கும் எனத் தெரிவித்தார்

Related posts