சுவிட்சலாந்தில் பேசப்படும் ஒரு ஈழத்தமிழ் சிறுமியின் பெயர்!!

ஈழத்தைச் சேர்ந்த தமிழ்க்குழந்தை ஒன்று, உயர்தரவகுப்புக்கான ஆய்வு ஒன்றை மேற்கொண்டு பலரதும் பாராட்டைப் பெற்றுள்ளது .

செங்காளன் மாநிலத்தில் வதியும் செல்வி ஆரணி ஜெயக்குமார் என்னும் மாணவி ‘ இலங்கையில் பாடசாலை மாணவருக்கான குடிநீர் நிலமை தொடர்பாக விரிவான கள ஆய்வை மேற்கொண்டு அது தொடர்பான பூரண அறிக்கையை சமர்ப்பித்துள்ளார் .

அந்த ஆய்வறிக்கையை பாராட்டிய நிபுணத்துவ ஆசிரியர் குழாம், அது தொடர்பாக பாராட்டும் தெரிவித்தனர்.

அத்தோடு அந்த மாணவியின் கள ஆய்வு பற்றிய செய்தியை பிராந்திய பத்திரிகை ஒன்றும் வெளியிட்டுள்ளது.

அத்தோடு இந்த ஆய்வுபற்றிய பொதுமக்கள், மற்றும் நலன்விரும்பிகளுக்கான சமர்ப்பணம் எதிர்வரும் 5ம் திகதி செங்காளன் மானிலத்தில் குறித்த மாணவியால் பாடசாலையின் அனுசரணையோடு இடம்பெற உள்ளது .

நுழைவுக்கட்டணம் மூலம் கிடைக்கும் நிதி, இலங்கையில் உள்ள 300 பள்ளிச்சிறார்களுக்கு ஆரோக்கியமான நீரைப்பெற்றுக்கொள்ள வழியேற்படுத்திக் கொடுக்கப்படும் என்று கூறப்படுகின்றது.

இந்த மாணவியின் முயற்சி உதவிநலத்திட்ட ஆய்வு அடிப்படையில் பலரதும் பாராட்டைப் பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts