சுவிஸ் உதயத்தால் சுனாமி நினைவுதினைத்தினை முன்னிட்டு முதியோர் இல்லத்திற்கு உலர் உணவு வழங்கி வைப்பு.

சுனாமிப் பேரலை ஏற்பட்டு 14 ஆம் ஆண்டு நினைவுதினைத்தினை முன்னிட்டு சுனாமியினால் முற்றிலும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு கல்லடி விபுலானந்தர் முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியோர்களுக்கு சுவிஸ் உதயம் அமைப்பு இன்று உலர் உணவுப் பொருட்களை வழங்கிவைத்தது.

கல்லடியில் இயங்கிக்கொண்டிருக்கும் இவ் முதியோர் இல்லத்தில் வசித்துவருகின்ற முதியோர்களுக்கு உதவி வழங்கவேண்டும் என சுவிஸ் நாட்டில் வசிக்கும் சுவிஸ் உதயத்தின் தலைவர் டி.எல்.சுதர்சன் பிரதிச்செயலாளர் அ.ராஜன் பொருளாளர் கே.துரைநாயகம்  மற்றும் அதன் நிருவாகக் குழுவினர்களினது வேண்டுதலின் பேரில் இவ் உதவிப் பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு சுவிஸ் உதயத்தின் கிழக்குமாகாணக்கிளையின் தலைவர் ஓய்வு நிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் 26 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் மற்றம் சுவிஸ் உதயம் அமைப்பின் உபசெயலாளர் கே.குபேந்திரன்  உட்பட நிருவாகத்தினர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் போது முதியோர்களுக்கான மதிய  உணவும் அன்றையதினம் வழங்கிவைக்கப்பட்டது.

OLYMPUS DIGITAL CAMERA




Related posts