சுவிஸ் உதயத்தின் செயற்பாடு சமூகநோக்குடையதாகவே அமையுமே தவிர சுயநலனுக்காக ஒருபோதும் அமையாது .

சுவிஸ் உதயத்தின் செயற்பாடு சமூகநோக்குடையதாகவே அமையுமே தவிர எவரது சுயநலனுக்காக ஒருபோதும் அமையாது என சுவிஸ் உதயத்தின் சுவிஸ் நாட்டுக்குரிய பொருளாளர் க.துரைநாயகம் தெரிவித்தார்
சுவிஸ் உதயத்தின் எதிர்கால முன்னெடுப்புக்கள் தொடர்பான விஷேட கலந்துரையாடல் பாசிக்குடா விடுதில் நடைபெற்றது. இதன் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில் சுவிஸ் உதயம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற எமது சமூகத்திற்கு உதவுவதற்காகவே அதன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றதே தவிர எவரது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் அல்ல
எமது அமைப்பின் தலைவர் செயலாளர் பொருளாளர் அங்கத்தவர்கள் அனைவரும் இணைந்துகொண்டே சுவிஸ் உதயம் அமைப்பானது சுவிஸ்நாட்டில் தலைமையாக இருந்து இயங்கிவருகின்றது.
அதன் கிளை கிழக்கில் இயங்கிவருகிறது இவ்வாறு நாம் அனைவரும் ஒன்றிணைந்தே இந்த உதவிகளை செய்து வருகின்றோம்.
இவ் அமைப்பானது ஆரம்பிக்கப்பட்ட காலகட்டம் சுனாமியால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்த காலமாகும் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை இனங்கண்டு வாழ்வாதாரம் கல்வி முன்னேற்றத் திற்கான உதவிளை செய்து இருந்தோம் இதுபோன்ற உதவிகளை எதிர்காலத்திலும் முன்னெடுப்பதற்கான வேலைகளை ஆரம்பிக்க இருக்கின்றோம் என்றார்.

Related posts