சுவிஸ் உதயம் அமைப்பினால் வெருகல் பிரதேச மக்களுக்கு நிவாரணம் வழங்கிவைப்பு


(சா.நடனசபேசன்)

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை வெருகல் பிரதேச செயலகப்பிரிவில் வசிக்கும் மக்களுக்கு சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் நிவாரணப் பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று 12 ஆம் திகதி வியாழக்கிழமை வெருகல் பிரதேச செயலாளர் குணநாதன் தலைமையில் நடைபெற்றது.

அண்மையில் நாட்டில் பெய்த மழையினால் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
இந்நிலையில் வெருகல் பகுதியில் பாதிக்கப்பட்ட சுமார் 100 குடும்பங்களுக்கு இவ் அமைப்பினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்தப் பொதிகளை சுவிஸ் நாட்டில் இருந்து வருகைதந்த சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் சமூகசேவகர் தொழில் அதிபர் க.துரைநாயம் சுவிஸ், உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன், பிரதித் தலைவர் ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் கண வரதராஜன்,செயலாளர் குவேந்திரன் அமைப்பின் உபசெயலாளர் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் திருமதி செல்வி மனோகர் உட்பட அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கிவைத்தனர்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சுவிஸ் உதயம் அமைப்பு அண்மைக்காலமாக இவ் உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts