சுவிஸ் உதயம் அமைப்பின் உதவிச் செயலாளர் செல்வி மனோகருக்கு நினைவுப்பேருரையும் பொதுச்சபைக் கூட்டமும் (சுவிஸ் நாட்டில்)

சுவிஸ் உதயம் கிழக்கின் உதவிச் செயலாளர் திருமதி செல்விமனோகர் கடந்த 18 ஆம் திகதி மரணமடைந்தார் இவரை நினைவு கூறும் வகையில்  சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் டி.எல். சுதர்சன் அவர்களது தலைமையில் 12.09.2021அன்று  Dorfstrasse. 32.  3123 Belp எனும் முகவரியில் காலை 11.00மணியளவில் நினைவு கூறல் நிகழ்வும் அத்துடன் சுவிஸ் உதயத்தின் 2021 ஆண்டிற்கான பொதுச்சபை கூட்டமும் நடைபெற உள்ளதனால் சுவிஸ் உதய உறுப்பினர்கள் அணைவரும் தவறாமல் சமூகம் அளிக்குமாறு அமைப்பின் செயலாளர் அம்பலவாணர் .ராஜன் தெரிவித்தார்.

  மேலும் அவர் தெரிவிக்கையில் சுவிஸ் உதயம் அமைப்பானது ஏழை மக்களுக்காக  2004 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு இலங்கையில் பல்வேறு சேவையினை முன்னெடுத்து வருகின்றது. இவ் அமைப்பில் திருமதி செல்வி மனோகர் ஒரு உறுப்பினராக இணைந்து எம்மோடு சேவையாற்றிய  ஒருவர்  இவ்வாறனவரது இழப்பு எமக்குப் பேரிழப்பாகும் எனவே இவர் தொடர்பான நினைவுப்பேருரையை நாம் அனைவரும் நிகழ்த்த இருப்பதனால் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார். குறிப்பு :-  (  சுவிஸ் சுகாதார அமைச்சின் நடைமுறைக்கேற்பநீங்கள் வருவதை தயவுசெய்து முன் கூட்டியே அறியத் தரவும் நன்றி )

 

Related posts