சுவிஸ் உதயம் அமைப்பின் பெயரைப் பாவித்து பொய்யான தகவலை வெளியிடும் செய்திகளை நம்பவேண்டாம்- பொதுச்செயலாளர் அம்பலவாணர் ராஜன்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுகின்ற உதவிகளை தடுத்து நிறுத்துவதற்காக சுவிஸ் உதயம் அமைப்பின் பெயரினைப் பாவித்து பொய்யான தகவல்களை வெளியிடும் இணையத்தளத்தினையும் அவர்களது கருத்தினையும் நம்பவேண்டாம் என சுவிஸ் உதயம் அமைப்பின் பொதுச்செயலாளர் அம்பலவாணர் ராஜன் தெரிவித்தார்.

சுவிஸ் உதயம் அமைப்பின் பெயரைப் பாவித்து பொய்யான தகவலை இணையத்தளங்களில் வெளியிட்டமையினைக் கண்டித்து  ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்

சுவிஸ் உதயம் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து கிழக்கு மக்களுக்கு சேவை செய்து வருகின்றது அந்த அமைப்பில் இருந்த சிலருக்கு முக்கிய பதவி கிடைக்கவேண்டும் என்பதற்காக அமைப்பின் செயற்பாடுகளை பிழையாக விமர்சனம் செய்வதனைத் நிறுத்தவேண்டும்.

இன்று கிழக்கில் பல்வேறுபட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன இந்த உதவியின் மூலம் நான் அரசியல் இலபம் பெறுவதற்கு அல்ல இலங்கைக்கு வருகின்ற எமது அங்கத்தவர்கள் இங்கு இயங்கிக்கொண்டிருக்கும் சுவிஸ் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின்  ஆலோசனைக்கு அமையவே உதவி வழங்குகின்றோம் இவ்வாறு உதவி வழங்கும் பணத்தினை யாரும் கொள்ளையடிக்க  முடியாது வெளிப்படையாக கணக்கறிக்கை இருக்கின்றது. இவ்வாறு இருக்கும் போது கணக்கறிக்கை காட்டவில்லை என்றும் அரசியல் நோக்கத்திற்குச் செயற்படுவதாகவும் எமது அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி பொய்யான தகவலை வெளியிட்டு மக்களை குழப்பம் நபர்களுக்கு எதிராக சுவிஸ் நாட்டில் வழங்குத் தாக்கல் செய்துள்ளோம் எனவே கிழக்கு வாழ் மக்கள் முகவரி அற்ற நபர்களால் வெளியிடப்படும் தகவலை நம்பவேண்டாம்

Related posts