சுவிஸ் சூரிச் ‘அன்பேசிவம்’ அமைப்பின் உலருணவு விநியோகம்.

சுவிஸ்  சூரிச் சிவனாலயத்தின் ‘அன்பேசிவம் ‘ அமைப்பின் கொரோனா நெருக்கடிக்குள்ளான மக்களுக்கு உலருணவு நிவாரணம் வழங்கும் திட்டம் அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 
அன்பேசிவம் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் இளம்விஞ்ஞானி சோ.வினோஜ்குமாரின் ஏற்பாட்டில் -04- சனிக்கிழமை வளத்தாப்பிட்டி மற்றும் பளவெளி கிராம மக்களுக்கு உலருணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
 
பளவெளி ஆதிசிவனாலயத்திலும் வளத்தாப்பிட்டி நாகதம்பிரான் ஆலயத்திலும்நடைபெற்ற விசேடபூஜையின்பின்னர் ஆலயத்தலைவர்களான எஸ்.துரைசிங்கம் வி.ஜெயச்சந்திரன் எஸ்.வடிவேல் மற்றும்  பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் சோ.  தினேஸ்குமார் உள்ளிட்டோர் நிவாரணப்பொதியை வழங்கிவைத்தனர்.
 
பிரதேச கிராமசேவை உத்தியோகத்தர் எஸ்.ரவி பொதுச்சுகாதாரபரிசோதகர் பி.இளங்கோ உள்ளிட்ட அலுவலர்கள் முன்னிலையில் 200;பொதிகள் மக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன.

Related posts