சொறிக்கல்முனையில் யானைகளின் அட்டகாசம்:ஒருதோட்டமே துவம்சமானது.

அம்பாறை மாவட்ட கரையோரப்பிரதேசத்தில் அண்மைக்காலமாக யானைகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது.
 
நேற்று நள்ளிரவு  சொறிக்கல்முனைக்குள் புகுந்த யானைகளின் பட்டாளம் ஓர தோட்டத்திற்குள் புகுந்து முற்றாக அங்குள்ள பயிர்களை துவம்சம் செய்தன.
 
முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சோ.புஸ்பராசாவின் வீட்டோடு கூடிய தோட்டத்திற்குள்தான் இந்த சம்ஹாரம் இடம்பெற்றிருக்கிறது.
 
அங்கு 20தென்னம்பிள்ளைகள் மாமரங்கள் வேலிகள் எல்லாவற்றையும் அழித்து சேதப்படுத்திவிட்டுச் சென்றிருக்கின்றன.
 
பாடுபட்டு நட்டுப்பராமரித்த தென்னைகள் பலன்தரும் நேரத்தில் இவ்வாறான அழிவுகள் ஆர்வத்தோடு விவசாயம் தோட்டம் செய்வோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருக்கின்றது.
 
கடந்த ஒருவாரகாலத்துள் இவ்வாறான பல அழிவுகளை இந்த யானைகள் ஏற்படுத்தியதோடு மல்வத்தையைச் சேர்ந்த எஸ்.சோதிலிங்கம்(வயது67) என்ற ஓய்வுநிலை அரசஊழியரொருவரையும் அடித்துக்கொன்றிருக்கிறது.
 
எனவே யானை மனிதமோதல் யானைகளால் ஏற்படும் அழிவுகளை கட்டுப்படுத்தலோடு சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் உடனடியாக மேற்கொண்டு மனிதஉயிர்களை காப்பாற்றவும் சேதங்களை அழிவுகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
 
யானைக்கும் அதற்கான மின்சாரவேலியிடலுக்கான இராஜாங்க அமைச்சரும் அம்பாறை மாவட்டத்திலிருக்கிறார். இந்த விடயத்தை அவரது கவனத்திற்காக சமர்ப்பிக்கின்றோம்.

Related posts