ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட அங்கத்தவர்களுக்கான ஒன்றுகூடல்

ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின்  அம்பாறை மாவட்ட அங்கத்தவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வும் கல்முனை பாண்டிருப்பு 01 கிராம அபிவிருத்திச் சங்கத்தின் கலந்துரையாடல் மண்டபத்தில் மாவட்ட வெளிக்கள உத்தியோகத்தர் பேரின்பராஜா மனோரஞ்சினி தலைமையில் நடைபெற்றது.

இதன் போது  நிறுவனத்தின் இலங்கை கிளைக்கான நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.டிலான் பொது முகாமையாளர் ரீ.சுகிர்தரன் திருமலை மாவட்ட வெளிக்கள உத்தியோகத்தர் பன்னீர்விழிச் செல்வம் சர்மிலா மற்றும் அம்பாறை மாவட்டத்தில் கிராம மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வு இறைவணக்கத்துடன் ஆரம்பமாகி மங்கள விளக்கேற்றல் அங்கத்தவர்களின் அறிமுகம் நிறுவனத்தின் செயற்திட்ட அறிமுகம் கடந்த கால செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் என நிகழ்ச்சி நிரல் அடிப்படையில் நடைபெற்றது.

பின்னர் அங்கத்தவர்களின் கருத்துப்பரிமாற்றங்கள் நடைபெற்றதுடன் அதன் போது பிரதேசத்தின் மத்தியில் உள்ள குறைபாடுகள் மற்றும் பயனாளிகள் தெரிவு செய்தல் தொடர்பாகவும் விடயங்களும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts