டெங்கற்ற பாடசாலைகளுக்கான போட்டியில் சாதனை

வலயமட்டத்தில் பாடசாலைக்கிடையே டெங்கற்ற பாடசாலைகள் போட்டி  மாவட்ட சுகாதார   வைத்திய அலுவலகத்தால் நடாத்தப்பட்டது.இப்போட்டியில் மட்/மட்/திருப்பெருந்துறை ஸ்ரீ முருகன் வித்தியாலத்திற்கு இரண்டாம் இடத்திற்கு தெரிவானது.

இதற்கான விருது வழங்கும் நிகழ்வு மாவட்ட சுகாதார வைத்திய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதன் போது மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர்.கே.திரிசுதன் அவர்களால் பாடசாலை அதிபர் சோ..தர்மசீலன் பொறுப்பாசிரியர் எல்.சத்தியானந்தன்  டெங்குக் குழு மாணவர்த்தலைவர் செல்வன். எஸ்.நிதர்சன் ஆகியோர் அழைக்கப்பட்டு நினைவுச்சின்னம், சான்றிதழ்,பரிசு என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அண்மையில் வலயமட்டத்தில் நடைபெற்ற சுகாதார கழகபோட்டியில் தங்க விருதினை பெற்றிருந்தமை குறிப்பிடதக்கது.

??????????????
??????????????

Related posts