தமிழர்கள் பலமான சமூகமாக மாறவேண்டிய தேவை உருவாகியுள்ளது. அம்பாரைமாவட்ட இணைப்பாளர்



தமிழ் மக்களாகிய  நாம் தொடர்ச்சியாக  அபிவிருத்தியில் பின்தங்கியவர்களாகச் செல்லக் கூடாது நாமும் பொருளாதாரத்தில் வலுவடைந்த சமூகமாக  மாறவேண்டும் அதற்கான வேலையினை அமைச்ச மனோகணேசன் மேற்கொண்டுள்ளமை தமிழ் மக்களுக்கு பெரும் வெற்றியாகும் என அரச கரும மொழிகள், சமூகமேம்பாடு ,இந்துகலாசார அமைச்சர் மனோகணேசன் அவர்களது அம்பாரை மாவட்ட இணைப்பாளர்  தா.ஜெயாகர் தெரிவித்தார்.
அமைச்சர் மனோகணேசன் அவர்களது பணிப்புரைக்கமைய கட்சியின் தேசிய அமைப்பாளர் வி.ஜனகன் அவர்களது வழிகாட்டலில் திருக்கோவில் பிரதேசசெயலகப்பிரிவில் உள்ள தம்பட்டை,சின்னத்தோட்டம்,மண்டானை ஆகிய கிராமத்து மக்களுக்கு கைத்தறி உபகரணம் வழங்கிவைக்கும்  நிகழ்வில் கலந்துகொண்டு  உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் மேலும் பேசுகையில் கடந்த கால யுத்தசூழ்நிலையினால் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கும் எமது தமிழ்ச் சமூகத்தினைப் பாதுகாத்து வாழ்வாதாரத்தில் உயர்த்தவேண்டும் அந்த  நோக்குடன் அமைச்சர் அம்பாரை மாவட்டத்தில் மட்டுமல்ல சகல இடங்களிலும் கல்வேறு Nலைத்திட்டங்களை ஆரம்பித்து இருப்பது தமிழர்களாகிய எமக்கு பெரும் வெற்றியாகும். அதிலும் குறிப்பாக அம்பரைமாவட்டத்தில் விஷேடமாக அவரது கண்காணிப்பில் பல வேலைத்திட்டங்கள் இடம்பெறுகின்றது.
எம்மிடம்  பலம் இல்லாமையினால்தான் இன்று கல்முனைத் தமிழ்ப்பிரதேச செயலகத்தினைத் தரமுயர்த்துவதற்காக உண்ணாவிரதம் இருந்து பெறவேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் இருந்து நாம் மாறி பலமான சமூகமாக மாறவேண்டும்.
 அதற்கு எம்மக்கள் அரசியல் கல்வி பொருளாதாரம் போன்வற்றில் முன்னேறவேண்டியதேவை இருக்கின்றது இதற்கு தமிழர்களாகிய எமக்கெல்லாம் அமைச்சர் வழிகாட்டியாக இருந்து தமிழ்பிரதேசங்களின் அபிவிருத்திக்காக உழைத்துக்கொண்டிருப்பது எமக்குக் கிடைத்த வெற்றியாகும் என்றார்

Related posts