தமிழ்நாட்டில் முதலாவது உலகத் தமிழிசை மாநாடு

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில், மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 2019 திசம்பர் 13 மற்றும் 14 ஆகிய நாட்களில், நூறு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக உலகத் தமிழிசை மாநாடு நடைபெற உள்ளதாக, மாநாட்டுக்கான இலங்கை ஒருங்கிணைப்பாளர் முனைவர் முருகு தயாநிதி, தெரிவித்தார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் கோ.விசயராகவன் தலைமையில் நடைபெற ஏற்பாடாகியுள்ள இம்மாநாட்டுக்கு புகழ்பெற்ற தமிழிசைக் கலைஞர்கள் அழைக்கப்படுவதோடு, ஐம்பதிற்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து அறிஞர்களும் மாணவர்களும் கலந்துகொள்ள உள்ளனர். 
இம்மாநாட்டில் தமிழிசைக் கருவிகளைக் காட்சிப்படுத்தல், தமிழிசைப்பாடல்கள், தமிழிசை நடனம் முதலிய நிகழ்வுகளும் இடம்பெற இருக்கின்றன. 
மேலும், தமிழிசையின் தோற்றம், வளர்ச்சி, தமிழிசை மருத்துவம், தமிழிசை நாடகம், தமிழிசைக் கல்வி, தமிழிசைக் கல்வெட்டு, தமிழிசைத் தூண்கள், தமிழிசை சார்ந்த அரசு திட்டங்கள் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளும் ஆய்வரங்கத்துக்காக வரவேற்கப்படுகின்றன. 
ஆத்துடன், பாரம்பரியத்தை உணர்த்தும் தமிழிசை, திரையிசையில் தமிழிசையின் பங்களிப்பு, தமிழிசை சார்ந்த பாடநூல்ள், இசை வழி தமிழ்க் கல்வி, தமிழிசை வளர்ச்சிக்கு தமிழிசைக்கல்லூரிகளின் பங்களிப்பு, தமிழிசைப்பள்ளிகளின் வரலாறும் அதன் பணிகளும், பல்கலைக்கழகங்களில் தமிழிசை ஆய்வுகள், தன்னார்வ தமிழிசைப்பள்ளிகளின் பங்களிப்பு, தமிழிசை நிகழ்ச்சிகள் அன்றும் இன்றும், தமிழ் இலக்கியத்தில் தமிழிசை, தமிழிசைப்பாடல் பெற்ற திருத்தலங்கள், தமிழிசை ஆளுமைகள், தமிழிசையில் இசைக்கருவிகளின் வகைகள், தமிழிசைக் கலைஞர்களின் வாழ்வியல், தமிழிசைக் கலைஞர்களின் படைப்புகள், தமிழிசையும் பிற இசைகளும், அயல் நாடுகளில் தமிழிசைப் பரவல் உள்ளிட்ட விடயங்களிலும் கட்டுரைகள் அமையலாம்.
குட்டுரைகள், தமிழில் அல்லது ஆங்கிலத்தில் அமையலாம், 10 பக்கங்களுக்கு மேற்படாமல்  யுனிகோர் (Unicord) எழுத்துருவில் இருத்தல் வேண்டும். கட்டுரையின் ஆய்வுச் சுருக்கத்தினை அக்ரோபர் 15 ஆம் திகதிக்குள்ளும் முழுமையான கட்டுரையினை நவம்பர் 16 திகதிக்குள்ளும் [email protected]  என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ 00919500106269 எனும் வாட்சப் எண்ணுக்கோ அனுப்பிவைக்கமுடியும். மேலும், விபரங்களை www.isaitamiljournal.com என்ற இணையத்தளம் வழியாகவும் அறியலாம்.

Related posts