தமிழ் அரசியல்கைதி விடுதலை செய்யப்பட வேண்டும்

தமிழ் அரசியல்கைதி விடயத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித்தலைவருமான சம்பந்தனும்,அவரது சகாக்காளும் விதண்டாவாதம் பேசிகின்றார்களா என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுகின்றது என தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும்,முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவிப்பு.

அரசியல்கைதிகளின் விடுதலை சம்பந்தமாக வெள்ளிக்கிழமை(19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்:-

12,000 விடுதலைப் புலிப்போராளிகளை மஹிந்த ஆட்சிக்காலத்தில் விடமுடியும் என்றால் தமிழ்மக்களின் வாக்கினால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியினால் ஏன் விடுதலை செய்யவில்லை..? என வடகிழக்கில் உள்ள தமிழ்மக்கள் மத்தியில் பாரியதொரு சந்தேகம் நிலவுகின்றது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பால் காப்பாற்றப்படும் நல்லாட்சி அரசால் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல்கைதிகளை இதுவரையும் விடுதலை செய்யவில்லை.தமிழ் அரசியல்கைதிகளின் நிலைப்பாட்டில் ஜனாதிபதி தூரநோக்குச் சிந்தனையுடன் செயற்பட்டும்,பொதுவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழ் அரசியல்கைதிகளை மிகவிரைவில் விடுதலை செய்யப்படவேண்டும்.

தற்போது சிறையில் உள்ள 154 அரசியல்கைதிகளை ஏன் ஜனாதிபதியினால் விடுதலை செய்ய முடியவில்லை.இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு  முட்டுக்கொடுத்தும்,தமிழ் அரசியல்கைதி விடயத்திலும் கவனமில்லாமல் செயற்படும் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஏன் முனைப்புடன் செயற்படவில்லை என்பது ஒட்டுமொத்த தமிழ்மக்களின் கேள்வியும்,எதிர்பார்ப்பாகும்.

எதிர்வரும் காலங்களில் நடைபெறவிருக்கும்  மாகாணசபைத்தேர்தலை மையப்படுத்தி தமிழ்மக்களை ஏமாற்றுவதற்கும்,தமிழ்மக்களின் வாக்குகளை சுவீகரிப்பதற்காகவும் தமிழ்அரசியல் கைதிகளை விடுவிப்பதற்காக வைச்சுள்ளாங்களோ என்று தமிழ்மக்கள் புலம்புகின்றார்கள் எனத் தெரிவித்தார்.

Related posts