தமிழ் அரசியல் கைதியின் குடும்பத்துக்கு நாமல் எம்.பி உதவி

தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினரான  தமிழ் அரசியல் கைதியொருவரின் குடும்பத்துக்காக வீடொன்றை அமைத்து தர நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ முன்வந்துள்ளார்.

வடக்கில் அண்மையில் ஏற்பட்ட வௌ்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்காக வடக்குக்கு விஜயம் செய்துள்ள நாமல் நேற்றைய தினம் கிளிநொச்சியிலுள்ள குறித்த கைதியின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Related posts