தமிழ் மக்களின் நிரந்தர இருப்பை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கிலேயே தமிழ் மக்கள் கூட்டணி செயலாற்றி வருகின்றது என்கின்றார் த.ம.கூட்டணியின் நிறுவாக இணைச்செயலாளர் எஸ்.சோமசுந்தரம்



தமிழ் மக்கள் கூட்டணியின் புதிய அங்கத்தவர்கள் இணைத்துக்கொள்ளும் நிகழ்ச்சித்திட்டம் இன்று 03 ஆம் திகதியிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இங்கு  கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மேலும் கூறுகையில் 
நாம் தற்பொழுது முன்னாள் நீதியரசரும் வடமாகாண முதலமைச்சருமான சீ.வீ விக்னேஸ்வரன் ஐயா தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியினை உருவாக்கியுள்ளோம் அந்தவகையில் கடந்த நாட்களில் வட கிழக்கு பகுதிகளில் உள்ள பொதுமக்களை புத்திஜீவிகள் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பல்வேறுபட்ட துறைசார் நிபுணர்களை சந்தித்து எமது கட்சியின் கொள்கைகள் செயற்பாடுகள் பொதுமக்களின் தற்காலத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் மற்றும் வாழ்வாதார செயற்திட்டங்கள் சம்மந்தமாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அதனடிப்படையில் எமது கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்த்துக்கொள்ளவது தொடர்பாக எமது மத்தியகுழுவில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன அதன் பிரகாரம் கட்சியின் கொள்கைகள் பரப்புரைகளில் ஆர்வமுள்ள மக்கள் இளைஞர் யுவதிகள் அனைவரும் 51/7 சோமசுந்தரம் சதுக்கத்தில் அமைந்துள்ள எமது கட்சிக்காரியாலயத்தில் திங்கள் முதல் வெள்ளிகிழமைவரை காலை 08.30 மணி தொடக்கம் மாலை 04.30 மணிவரையில் இடைப்பட்ட நேரங்களில் தொடர்புகொண்டு அங்கத்தவர்களுக்கான படிவங்களை பூர்த்தி செய்து எமது மக்களுக்கான அரசியல் பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
அத்துடன் தற்போது உள்ள காலப்பகுதியில் எமது மக்களுக்கான ஒரு சரியான தலைமைத்துவம் தேவைப்படுகின்றது காரணம் அவர்களின் இருப்பை பற்றி யோசிப்பதற்கு இங்கு உள்ள பா.உ எவரும் அக்கரை செலுத்துவதாகவில்லை அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து மக்களது கருத்துக்களுக்கும் பிரச்சனைகளுக்கும் செவிசாய்க்காமல் வெரும் மேடைப்பேச்சுக்களில் மாத்திரம் பேசுகின்றார்கள் நடைமுறையில் எதையும் தமிழ்மக்களுக்கு செய்வதாகவில்லை.
ஆகையினால் தமிழ் மக்களின் நிரந்தர இருப்பை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் தமிழ் மக்கள் கூட்டணி செயலாற்ற பல முடிவுகளை தீர்மானித்துள்ளோம் என இவ்விடத்தில் கூறிக்கொள்ளவிருப்புகின்றோம் என த.ம.கூட்டணியின் நிறுவாக இணைச்செயலாளர் எஸ்.சோமசுந்தரம் கருத்துத்தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts