தாந்தாமலை தமிழ் முருகன் ஆலய கொடியேற்றம்

கிழக்கு இலங்கையில் வரலாற்றுசிறப்புமிக்கதும், தொன்மைவாய்ந்ததும், ஆடகசவுந்தரி அரசியாலும், முற்காலத்து முனிவர்கள் பலராலும் “தாண்டவகிரி” என அழைக்கப்படுவதும், தற்காலத்தில் சின்னக்கதிர்காமம் என அழைக்கப்படுவதுமான மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பெருநிலம் மண்முனை  தென்மேற்கு பிரதேசத்தில் தாந்தாமலையில் அமைந்துள்ள ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று(25/07/2019) வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை மட்டக்களப்பு தாமரைக்கேணி ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய பரிபாலன சபையினரால் நேற்று (24/07/2019) கொண்டுவரப்பட்டது.பூசை, ஆராதனைகள் சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக்குருக்கள் தலைமையில் நடைபெற்றன. இன்றிலிருந்து தொடர்ச்சியாக 21நாட்கள் திருவிழாக்கள் இடம்பெற்று, 15.08.2019ம் திகதி  காலை 06மணிக்கு திருவோண நட்சத்திரசுபமுகூர்ந்த வேளையில் தீர்த்தோற்சவம் இடம்பெற்று மகோற்சவம் நிறைபெறவிருக்கின்றது.இன்றய கொடியேற்ற ஆராதனைகளை கண்டுகளிக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமன்றி ஏனய இடங்களிலும் இருந்து பெரும் திரளான மக்கள் கண்டு களித்தனர்.

Related posts