திருக்குறளுக்கு நிகரான நூல் உலகில் எதுவுமில்லை! அது ஒருவாழ்வியல்தத்துவம் என்கிறார்பேராசிரியர் சிவலிங்கராசா. யாழ்ப்பாணபல்கலைக்கழக கைலாசபதி அரங்கிலிருந்து

2050ஆண்டுகளுக்கு முன் தெய்வப்புலவர் திருவள்ளுவரால் உருவாக்கப்பட்ட திருக்குறளுக்கு நிகராக எந்த நூலையும் குறிப்பிட்டுச்சொல்லமுடியாது. அது ஒரு வாழ்வியல்தத்துவம்.
 
இவ்வாறு இரண்டாவது உலதிருக்குறள்மாநாட்டின்முதல்நாள் மாநாட்டுப்பேருரை நிகழ்த்திய யாழ்ப்பாண பல்கலைக்கழக ஓய்வுநிலை தமிழ்த்துறைப்பேராசிரியர் சி.சிவலிங்கராசா தெரிவித்தார்.
 
இம்மாநாடு நேற்றுமுன்தினம்(21 – வெள்ளிக்கிழமை) காலை யாழ்.பல்கலைக்கழக தமிழ்த்துறைப்பேராசிரியர்முனைவர் கி.விசாகருபன் தலைமையில் கோலாகலமாகஆரம்பமாகியது.
 
இம்மாநாட்டிற்கு இந்தியா மலேசயிh அவுஸ்திரேலியா லண்டன்பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து பேராளர்கள்முனைவர்கள் பேராசிரியர்கள் ஆர்வலர்கள்எனபலதரப்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இலங்கையின் யாழ்ப்பாண பல்கலைக்கழக முக்கியஸ்தர்கள் கிழக்கிலிருந்து காரைதீவுவள்ளுவர் சிலைநிறுவும் குழுவினர் தவிசாளர்கே.ஜெயசிறில்தலைமையில்கலந்து சிறப்பித்தனர்.
 
முன்னதாகஇந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டு வடக்கில் உரும்பிராயிலும் கிழக்கில் காரைதீவிலும் நிறுவப்படவுள்ள இரு திருவள்ளுவர் சிலைகளுக்கு யாழ்.பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரிபேராசிரியர் க.கந்தசாமி கலைத்துறைப்பீடாதிபதி கலாநிதிக.சுதாகர் சிலையைஅன்பளிப்புச்செய்த தமிழ்நாடு உடையார் கோயில் குணா ஆகியோர் சென்று மரியாதை செலுத்தினர்.
 
பின்னர் பல்கலைக்கழககைலாசபதிஅரங்கில் விழா ஆரம்பமாகியது.பல்கலைக்கலைக்கழகஇசைத்துறைமாணவர்களின்தமிழ்த்தாய்வாழ்த்துப்பாடலையடுத்து விசேடமாகஇந்தியாவிலிருந்து வருகைதந்த பெருவுடையார் நாட்டிய ஆசான் கிருஸ்ணாஞ்சலி வேணுகோபால் குழுவினரின் திருக்குறள் பரத நாட்டியம்சபையோரைவெகுவாகக்கவர்ந்தது.
 
வரவேற்புரையை லண்டன் கோல்ட்ஸ்மித் பல்கலைக்கழக பேராசிரியர் சிவாப்பிள்ளை அரசறிவியல்துறைத்தலைவர் கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் ஆகியோர் நிகழ்த்தினர்.
ஆசியுரைகளை தென்னிந்திய திருச்சபைப்பேராயர் கலாநிதி சு.ஜெபநேசன் யாழ்.பல்கலைக்கழகபேரவை உறுப்பினர் கலாநிதி ஆறுதிருமுருகன் ஆஸ்திரேலிய மெல்பேர்ன்தமிழ்ச்சங்க ஆலோசகர் தமிழறிஞர் ம.ஜெயராமசர்மா ஆகியோர்நிகழ்த்தினர்.
நோக்கவுரையை விழா ஏற்பாட்டாளர் தமிழ்நாடு தமிழ்த்தாய்அறக்கட்டளைநிறுவுனர் உடையார்கோயில் குணா நிகழ்த்தினார்.
 
விருந்தினர்களான இந்திய துணைத்தூதுவர் ச.பாலச்சந்திரன்  யாழ்.பல்கலை தகுதிவாய்ந்த அதிகாரிபேராசிரியர் க.கந்தசாமி உள்ளிட்ட பலர்கலந்துகொண்டனர்.
இந்தியதுணைத்தூதர்பாராட்டிக் பொன்னாடைபோர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.அதேபோல் ஆசியுரை நல்கியவர்கள்தூதுவரால் பாராட்டப்பட்டார்கள்.
 
 
மதிய இடைவேளையின் பின்னர்பொது அரங்கம் மற்றும் ஆய்வரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன. வாழ்த்துரைகளை நாமக்கல் முனைவர் கமலா சிவம் காரைதீவு உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா யாழ்.அன்பர் சிவ.ராஜ்குமார் திருச்சி கவிஞர் மணல்மேடுகுருநாதன் மதுரை குரு.ஜெயச்சந்திரன்ஆகியோர்வாழ்த்துரைகளை வழங்கஅழைக்கப்பட்டனர்.
சிறப்புரையை பூண்டி பேராசிரியர் முனைவர் வி.ஆர்.அங்கப்பன் அமெரிக்கா மனநலமருத்துவ நிபுணர் ஆல்பேர்ட்  ஆகியோர் நிகழ்த்தினர்.
 
நிகழ்வுகள் 9.30மணிஎன்று குறிப்பிடப்பட்டிருந்தும் 10.15மணியளவில்ஆரம்பமானது. அந்தக்கணமிருந்து மதியபோசனம் வரை 2.00மணிவரை சபையோருக்கு எவ்விதபானமும் வழங்கப்படவில்லை.மேடையிலிருந்த பெரியார்களுக்கு மட்டும் சிறிய தண்ணீர்ப்போத்தல் வழங்கப்பட்டிருந்தமையைபலரும் சுட்டிக்காட்டினர். மதியபோசனம் சகலருக்கும் வழங்கப்படும்எனக்கூறப்பட்டபோதிலும்உரியவேளைக்கு போசனம் வந்துசேராததால் 50வீதமானவர்கள் வெளியேசென்றுகடைகளில்உண்டதைக்காணமுடிந்தது.ஒழுங்கமைப்பில் சீர்த்திருத்தங்கள்அவசியமெனச்சுட்டிக்காட்டப்படது.

Related posts