திருமலை பிரதமரின் வருகை ஓர் அரசியல் தந்திரம் என்கின்றார் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா

திருமலை பிரதமரின் வருகை ஓர் அரசியல் தந்திரம் என்கின்றார் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா 

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் திருகோணமலை விஜத்தை முன்னிட்டு இன்று 14 ஆம் திகதி திருமலை கிழக்கு மாகாண ஆளூநர் காரியாலயத்திற்கு  கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட கவணீர்ப்பு போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இது தெடர்பாக மேலும் கருத்துத் தெரிவிக்கையில் 
எமது உறவுகள் இன்றுடன் 871 நாளாக வீதியில் இறங்கி உறவுகளைத்தேடி நீதிக்கான போராட்டமானது தொடர்ந்த வண்ணம் உள்ளது.  இந்நிலையில்  மக்களின் பிரச்சனைகளை இந்த அரசாங்கம் கண்டு கொள்ளாமல் இருக்கின்றது தமிழ் அரசியல்வாதிகளும் இதனை பொருட்படுத்தாமல் இருக்கின்றனர் நாம் நடைபெற்ற யுத்த காலங்களிலும் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது எமது உறவுகளை கையளித்தும் கடத்தப்பட்டும் இருந்தனர் அவர்களை நாம் தற்போதுவரையில் உரியவர்களிடம் கேட்கின்றோம்.
அத்துடன் அரசியல்வாதிகள் தமது சுயலாமத்திற்காக இராஜதந்திரமாகவே செயற்படுகின்றனர் அது போலவே பிரதமரின் வருகையும் அரசியல் தந்திரமாகவே அமைகின்றது என நான் இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts