தெரிவுக்குழுவில் முன்னிலையாக மாட்டேன் – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டால், தான் முன்னிலையாக மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தற்போது இடம்பெற்றுவரும் ஊடகப்பிரதானிகள் உடனான சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவுக்குழுவென்பது அரசியல் நாடகம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அத்தோடு அதை தற்போது அலரிமாளிகையில் நடித்துப் பழகுவதாகவும் மறுநாள் அதனை நாடாளுமன்றத்தில் நடித்துக்காட்டுகின்றனரென்றும் ஜனாதிபதி இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் அரசியல் அமைப்பிற்கும் உயர்நீதிமன்றத்திற்கும் எதிராகவே தெரிவுக்குழு செயற்படுகிறதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்காக ஜனாதிபதியும் அழைக்கப்படுவாரென தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

குறிப்பாக அந்தக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான சரத் பொன்சேகா, ஜனாதிபதியை அழைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts