தேசிய உணவுச்சாலை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு

இலங்கையின் உண்மையான சுவை என்ற தொனிப்பொருளின் கீழ் “ஹெல பொஜுன் ஹல” தேசிய உணவுச்சாலை கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வாவினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த திறப்பு விழா இன்று (10) இடபெற்றுள்ளது. கமத்தொழில், கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பேராதனை விவசாயத் திணைக்களமும், கிழக்கு மாகாண விவசாய திணைக்களமும் ஒன்றிணைந்து குறித்த தேசிய உணவுச்சாலை நிர்மாணித்துள்ளன.
திருகோணமலை, மட்டிக்களியில் நிர்மாணிக்கப்பட்ட இந்த உணவகத்தில் பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் பானங்கள் என்பவற்றை பொதுமக்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
தொற்று நோய்களின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கும், பாரம்பரிய உணவினை நியாயமான விலையில் பொதுமக்களுக்கு வழங்கும் வகையிலும் இந்த உணவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
உணவகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.சரத் அபேகுணவர்தன, விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டபள்யூ.எம்.டபள்யூ வீரக்கோன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts