தேசிய பாடசாலையாக தரமுயரும் களுதாவளை மகாவித்தியாலயம் ! விஜயகலா மகேஸ்வரன் கலந்துகொள்ளும் இல்ல விளையாட்டு போட்டி

களுதாவளை மகாவித்தியாலயம் பாரிய அபிவிருத்தியுடன் தேசிய பாடசாலையாக தரமுயர்ந்தது.

கல்வி, விளையாட்டு என   மாகாணத்தில் தலைசிறந்த பெறுபேறுகளை பெற்று முன்னணி பாடசாலையாக திகழும் களுதாவளை மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்ட்டுள்ளது

களுதாவளை கல்விச்சமூகத்தின் வேண்டுகோளின் அடிப்படையில் கல்வி ராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களின் முயற்சியில் தேசிய பாடசாலையாகியுள்ளது

இது தொடர்பான அறிவிப்பை, சனிக்கிழமை  பாடசாலையின் அதிபர் செந்தில் குமார் தலைமையில் இடம்பெறும்  இல்லங்களுக்கிடையேயேயான விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் அமைச்சர் உத்தியோக பூர்வமாக அறிவிப்பார். அத்துடன் 75 மில்லியன் பெறுமதியான உள்ளக விளையாடடரங்கம், வகுப்பறை கட்டிடம், மலசல கூடம் என்பவற்றுக்கு அடிக்கல் நடுவதற்கான நிகழ்வும் அன்றையதினம் இடம்பெறும்.

அத்துடன் களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்துக்கு செல்லும் பிரதான பாதையை ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் புனரமைத்து செப்பனிட நடவடிக்கை எடுத்திருந்தார், குறித்த பிள்ளையார் ஆலய வீதியும் அன்றைய தினமே   திறந்து வைக்கப்பட உள்ளது.

மேலும் கல்முனை மற்றும் மட்டக்களப்பின் பல பாடசாலைகளுக்கும் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடுகளையும் அமைச்சர் மேற்கொண்டுள்ளார்.

Related posts