தேசிய வாசிப்பு மாத்தினை முன்னிட்டு பேத்தாழை பொது நூலகத்தினால் சிறப்பு பட்டிமன்றம்

தேசிய வாசிப்பு மாத்தினை முன்னிட்டு பேத்தாழை பொது நூலகத்தினால் சிறப்பு பட்டிமன்றம் நேற்று 20   நடாத்தப்பட்டது.
மட்டக்களப்பு கதிரவன் பட்டிமன்றக் குழுவினரின் ‘இலக்கியம் கூறும் அறவழியில் வாழ்தல் சங்கடமா, சந்தோசமா?’ எனும் தலைப்பில் அமைந்த இச் சிறப்பு பட்டிமன்றத்திற்கு பலர் பார்வையாளர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பேத்தாழை குகனேசன் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஸோபா ஜெயரஞ்சித், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களால் பட்டிமன்ற கலைஞர்கள் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன், நிகழ்வின் இறுதியில் பேத்தாழை பொது நூலகமும், கோறளைப்பற்று பிரதேச சபையும் இணைந்து வழங்கிய பாராட்டுச் சான்றிதழும் தவிசாளரினால் கலைஞர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts