நாட்டின் பாதுகாப்பு கருதி அனைவரும் கோட்டாபாய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் – கருணா

(சதீஸ்)
 
இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் பயங்கரவாததை முற்றாக நீக்குவதற்கு தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கிவேண்டும் என தெரிவித்த முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) நாட்டின் பாதுகாப்பு கருதி நாட்டிலுள்ள அனைத்து மக்களும் அவருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
 
ஹிஸ்புல்லாவினால் புனாணையில் நிருமானிக்கப்பட்டுவரும் பல்லைக்கழகத்தை அரச உடமையாக்க கோரி திங்கட்கிழமை (19) மட்டக்களப்பு கிரானில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
 
ஹிஸ்புல்லாவினால் அமைக்கப்படும் பல்கலைக் கழகத்தில் முஸ்லிம்களின் தத்துவங்கள் அவர்களது சட்டங்கள் மாத்திரமே போதிக்கப் போகிறார்களே தவிர இது ஒரு பல் கலைக் கழகமாகவோ அல்லது தொழில்நுட்ப கல்லூரியாகவோ இயங்கப்போவதில்லை.
 
கடந்த ஏப்பிறல் மாதம் நடைபெற்ற பயங்கரவாத தாக்குததில் அதிகமாக தமிழ் மக்களே கொல்லப்பட்டுள்ளார்கள். மைத்திரிபால ஜனாதிபதி சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை நம்பி தமிழ் மக்கள் வாக்களித்தார்கள் அவர்களை இந்த அரசு ஏமாற்றியுள்ளது. இவர்கள் எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை மாறாக முஸ்லிம் தீவிரவாதிகளின் குண்டுத் தாக்கதலில் எமது மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
 
 
வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது தரப்பு வேட்பாளராக கோட்டபாய ராஜபக்ஷவை வேட்பாளராக அறிவித்துள்ளார். அவரை ஜனாதிபதியாக்க வேண்டும்.
 
 ஏப்பிறல் மாதம் நடைபெற்ற முஸ்லிம் பயங்கரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 90 சதவீதமானவர்கள் தமிழர்கள். இவ்வாறான பங்கரவாத தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கும் பொருளாதார கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு  நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கும் நாங்கள் கோட்டாபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக வேண்டும்.
 
 கோட்டபாய ராஜபக்ஷ யுத்தத்தை முன்னின்று முடித்தவர் யுத்த குற்றவாளி என பல்வேறு வியாக்கியானங்கள் கூறப்படுகின்றன. யுத்தம் நிறைவடைந்து ஒரு வருடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சீருடை தரித்த இராணுவ தளபதி சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்குமாறு கூறினார்கள். யுத்தத்தினை நடத்திய இராணுவத் தளபதிக்கு வாக்களிக்க முடியுமானால் ஏன் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபாய ராஜபக்ஷவிற்கு வாக்களிக்க முடியாது.
 
தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது மக்கள் விடுதலை முன்னணி அவர்களுடைய வேட்பாளரை அறிவித்துள்ளார்கள். எங்களுடைய வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது இதை உணர்ந்துகொண்டு வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் கோட்டாபாய ராஜபக்ஷவிற்கு வாக்களிக்க வேண்டும்’ என்றார்.

Related posts