நாளை தசமியில் வித்தியாரம்பம் செய்வது பொருத்தம்சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் கூறுகிறார்.

இந்துக்களின் ஏடுதொடங்கும் வித்தியாரம்ப நிகழ்வு செய்வதற்கு  நாளை (26) திஙகட்கிழமை காலையே பொருத்தமாகும்  என கிழக்கின் பிரபல குருக்களான காரைதீவு ஸ்ரீ கண்ணனை அம்மனாலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸவரக்குருக்கள் தெரிவித்தார்.
 
இம்முறை வித்தியாரம்பம் செய்வதில் இந்துக்கள் சற்று தெளிவின்மையுடன் காணப்படுவதால் எப்போது வித்தியாரம்பம் செய்யலாம் என்று கேட்டதற்கு அவர் மேறகண்டவாறு பதிலளித்தார்.
அவர் மேலும்கூறியதாவது.
 
வழமையாக விஜயதசமியில் வித்தியாரம்பம் முதல் தொழில்ஆரம்பித்தல் முதலான சுப கருமங்கள் செய்வது வழமை. இந்த சார்வரி வருடத்தில் நவமி என்பது இன்று  ஞாயிற்றுக்கிழமை பி.ப.12.16வரை நிற்பதனால் அக்காலத்துள் வித்தியாரம்பம் செய்வது பொருத்தமல்ல.
 
பொதுவாக அட்டமி நவமி காலத்துள் நல்லகாரியங்களை ஆரம்பிக்கமாட்டார்கள். இது இந்துக்களின் மரபு.
எனவே தசமியில் செய்வது நல்லது. தசமி இன்று  12.17க்கு ஆரம்பித்தாலும் பின்னேர வேளைகளில் வித்தியாரம்பம் செய்வதில்லை. எனவே நாளை (26) திங்கட்கிழமை 12மணிக்கு முன்பதாக காலைவேளையில் வித்தியாரம்பம் செய்வது நல்லது . அதுவே பொருத்தமாகும். என்றார்.

Related posts