நாவிதன்வெளி ஊடகவியலாளர் முஸ்தபாவிற்கு, நாவிதன்வெளி பிரதேச சபை உதவித் தவிசாளர்தொலைபேசியில் அச்சுறுத்தல்

உண்மைச் சம்பவத்தை ஆதாரங்களுடன் வெளிப்படுத்திய நாவிதன்வெளி ஊடகவியலாளர் முஸ்தபாவிற்கு, நாவிதன்வெளி பிரதேச சபை உதவித் தவிசாளர்தொலைபேசியில் அச்சுறுத்தல்

நாவிதன்வெளிப் பிரதேசத்திலுள்ள சாளம்பைக்கேணி-4 கிராமசேவகர் பிரிவில், குழாய் பொருத்தப்படாத இடங்களில் குடிநீர்த்தட்டுப்பாடு நிலவுவதை, சாளம்பைக்கேணி- 4 அல்-குறைசியா இளைஞர்கழகம் நாவிதன்வெளிப் பிரதேச சபைத் தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு வந்தததையிட்டு, குறிப்பிட்ட பிரதேசங்களில் நாவிதன்வெளிப் பிரதேச சபையினால் நீர்த்தாங்கிகள் வைக்கப்பட்டு, வவுச்சர் மூலம் நீர்நிரப்பிக் கொடுக்கப்பட்டது.

இவ்விடயத்தை அல்-குறைசியா இளைஞர்கழகம், நாவிதன்வெளி ஊடகவியலாளரான எம்.ஏ.ஆர்.எம்.முஸ்தபா அவர்களிடம் தெரிவித்தனர். இச்செய்தி கடந்த வெள்ளிக்கிழமை (08ஊடகங்களில்  வெளியிடப்பட்டது.

இச்செய்தி குறித்து நாவிதன்வெளி பிரதேச சபையின் உதவித் தவிசாளர் ஏ.கே. சமட், நாவிதன்வெளி சிரேஷ்ட ஊடகவியலாளரான எம்.ஏ.ஆர்.எம்.முஸ்தபாவிற்கு தொலைபேசியின் மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

குறிப்பிட்ட இப்பிரதேசங்களுக்கு நானே நீர் வழங்கியுள்ளேன், என்னுடன் மோதவேண்டாம், மோதினால் என்ன நடக்கும் என்று சொல்லமாட்டன் என அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இவ்வச்சுறுத்தல் உரையாடல் ஊடகவியலாளரது கையடக்கத் தொலைபேசியில் பதிவாகியுள்ளது.

குறிப்பிட்ட செய்திபற்றி விபரம் தெரிந்துகொள்ளாமல் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்தமையானது, ஊடக சுதந்திரத்திற்கு விடுக்கும் சவால் என  நாவிதன்வெளியிலுள்ள இளைஞர் அமைப்புக்கள் கவலையைத் தெரிவித்துள்ளன.

Related posts