நுகர்வுப் பாருட்களின் விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு நுகர்வோர் அதிகார சபையிடம், பால்மா இறக்குமதி நிறுவனங்கள் கோரியுள்ளன.

இந்த நிலையில், எதிர்காலத்தில் கூடவுள்ள வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழுவின் கூட்டத்தில் இது குறித்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட உள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையில் கடந்த மாதம் 3ஆம் திகதி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 15 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவின் விலை 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், 920 ரூபாவாக இருந்த ஒரு கிலோ பால்மா 935 ரூபாவாகவும், 400 கிராம் பால்மாவின் விலை 375 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டிருந்தது.

Related posts