நோயாளி பாதுகாப்பு சர்வதேச தினம்

நோயாளி பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ஆம் திகதி உலக  நோயாளி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. நோயாளி பாதுகாப்பு என்பது உலகப் பொது சுகாதாரப் பிரச்சினையாகும்.சுகாதார பராமரிப்பின் அடிப்படைக் கொள்கையும் அதுவே.உலக்கெங்கும் விழிப்புணர்வை உண்டாக்குவதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.

அதற்கமைய  (17)  சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் தர முகாமைத்துவ பிரிவினரின் ஏற்பாட்டில்  2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த தர முகாமைத்துவ வளையங்களுக்கான போட்டிகள் நடாத்தப்பட்டு  விடுதிகளுள் வெற்றி பெற்ற விடுதிகளுக்கு நினைவுச்சின்னம்,சான்றிதழ்கள்  வழங்கி வைக்கப்பட்டது.
 
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக  கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கே.சுகுணன்,கல்முனை பிராந்திய சுகாதர வைத்திய சேவைகள் பணிமனையின் திட்டமிடல் பிரிவு வைத்திய பொறுப்பு அதிகாரி டாக்டர் எம்.சி.எம் மாஹிர்,கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய சேவைகள் பணிமையின் பிரதி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் டி.எஸ்.டி.ஆர் றஜாப்,கல்முனை பிராந்திய சுகாதார பணிமணையின் தர முகாமைத்துவ பொறுப்பதிகாரி டாக்டர் பி.ஜி டேனியல், சம்மாந்துறை ஆதார வைத்திய சாலையின்  வைத்தியர்கள்,தாதிகள்  என பலர் கலந்து கொண்டனர்.

Related posts