பட்டதாரி பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்படாத 389 பட்டதாரிகளின் மேன்முறையீடு பரிசீலனைக்குட்படுத்தப்படுகிறது

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரிப் பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்படாத 389 பட்டாதாரிகள் மேன்முறையீட்டு செய்திருந்தனர். அவர்களது விண்ணப்பங்கள் தற்பொழுது பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றது. 
 
 
இதனடிப்படையில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அதகி பட்சமாக 123 பட்டதரிகளும் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 6 பட்டதாரிகளும் மேன்முறையீடு செய்திருந்தனர். 
 
 
இதுதவிர களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 57 பேரும், ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் 31 பேரும், ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவில் 26 பேரும், கோறளைப் பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் 25 பேரும், காத்தான்குடி மற்றும் மணமுனைப் பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா 22 பேரும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் 16 பேரும், கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் 15 பேரும், போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 13 பேரும், மண்முனை மேற்கு வவுனதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 12 பேரும், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் 11 பேரும், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 10 பேரும் மேன்முறையீடு செய்துள்ளனர்.
 
இம்மாவட்டத்தில் 2 ஆயிரத்தி 88 பட்டதாரி பயிலுனர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன், 1966 பட்டதாரி பயிலுனர்கள் மாத்திரமே 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தமது கடமையினைப் பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Related posts