பட்டப்பகலில் துணீகரக் கொள்ளை களுதாவளையில் சம்பவம்.

களுதாவளையில் தனது கணவருடன் துவிச்சக்கர வண்டியில் பின் இருக்கையில் சென்று கொண்டிருந்த குடும்பப் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்த சந்தேநபர் ஒருவர் எட்டி பித்து எடுத்துக் கொண்டு ஓடிய சம்பவம் ஒன்று சனிக்கிழமை (09) பகல் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது யாதெனில்:-

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளைக் 3ம் குறிச்சியை  சேர்ந்த ஒரு குடும்பஸ்தர் களுதாவளையில் அமைந்துள்ள பொதுச் சந்தைக்குச் சென்று விட்டு மீண்டும், தமது வீடு நோக்கிச் கணவருடன் துவிச்சக்கர வண்டியில் மனைவி பின் இருக்கையில் இருந்து சென்று கொண்டிருந்த வேளை அப்பெண் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை மோட்டார் சைக்கிளில் அவர்களைப் பின் தொடர்ந்து வந்த சந்தேக நபர் ஒருவர் எட்டி பித்து எடுத்துக் கொண்டு ஓடியுள்ளதாக குடும்பஸ்த்தினர் தெரிவித்தனர்.

குறித்த குடும்பத்தினர் பொதுச் சந்தைக்குச் சென்று விட்டு மீண்டும் அவர்களது வீடு நோக்கிச் சென்று கொண்டிருப்பதையும், குறித்த குடும்பப் பெண் கழுத்தி தங்கச்சங்கிலியை அணிந்திருப்பதையும்,நன்கு அவதானித்திருந்த குறித்த அந்த சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு இந்த பட்டப்பகலில் இத்துணீகரக் கொள்ளைச் சம்பவத்தைச் செய்தள்ளதாக கிராமத்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இச்சம்பவத்தில் குறித்த பெண் அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலி பறிபோய்யுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் அறிந்த களுவாஞ்சிகுடி பொலிசார் ஸ்தலத்திற்கு விரைந்து விராசணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மிக அண்மைக்காலமாக இவ்வாறான கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.பொதுவாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் பெண்களின் தங்க ஆபரணங்களே சூட்சுமமான முறையிலும்,நன்கு திட்டமிட்டு பறிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ்மாதிபர் பூஜித ஜயசுந்தர விஷேட பொலிஸ் குழுவை நியமித்து இனம்,மதம்,மொழி கடந்து திருடர்களை பிடிப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்பெண்கள்,மகளீர் அமைப்புக்கள் கோரிக்கை விடுக்கின்றார்கள்.

Related posts