பல்கலையில் பாடங்களும் பரீட்சசைகளும் நடைபெறவில்லை : கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் 14வது நாளாகவும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

நூருல் ஹுதா உமர் / எம்.ஐ.எம்.சர்ஜுன்.
 
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழக போதனைசாரா ஊழியர்கள் உட்பட பல்கலைக்கழக நிறைவேற்று அதிகாரிகள் இணைந்து மேற்கொள்ளும் கால வரையறையற்ற தொடர் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு விரைவான தீர்வு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
 
வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழக பிரதான வளாக முன்றலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்வில் பல்கலைக்கழக போதனைசாரா ஊழியர்களுடன் நிறைவேற்று உத்தியோகத்தர்களும் இணைந்து கொண்டனர்.
 
14 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, உள்வாரி மற்றும் வெளிவாரி பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இந்தக் காலப்பகுதிகளில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த பரீட்சைகளும் தடைப்பட்டுள்ளன.
 
 
ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க மேலும் தாமதமடையுமிடத்து எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பில் பாரிய தொழிற்சங்க நிகழ்வை நடாத்துவதற்கும் அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம் தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts