பல அமைச்சுகள் இனம்சார்ந்து செயற்படுகின்றன: 60வருடகாலமாக தமிழ்மக்கள் அபிவிருத்தியைக்காணவில்லை!

(காரைதீவு  நிருபர் சகா)
 
அமைச்சு என்றால் அது முழுநாட்டிற்கும் அனைத்துஇன மக்களுக்குமானது. ஆனால் இலங்கையில் சில அமைச்சுகள் குறித்த அமைச்சர் எந்த இனம் சார்ந்தவரோ அந்த இனத்திற்கு மாத்திரம் சேவைசெய்கின்ற துரதிஸ்டநிலை காணப்படுகின்றது. இதனால் தொடர்ந்து 60வருடகாலமாக தமிழ்மக்கள் அபிவிருத்தியைக்காணமலுள்ளனர்.
 
இவ்வாறு காரைதீவு 8ஆம் பிரிவிலுள்ள சுனாமி தொடர்மாடி வீட்டுத்திட்ட மக்கள்முன்னிலையில் உரையாற்றிய காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.
சுனாமியின்பின்னர் 2006இல் அமைக்கப்பட்ட இத்தொடர்மாடிவீட்டுத்திட்டத்தில் 21மாடிகள் உள்ளன.42குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. ஒருமாடிக்கு அதாவது இருகுடும்பங்களுக்கு ஒரு மலசலகூடக்குழி;.அது ஒருவருடத்துள் நிறைந்துவிடுகின்றது. 
 
இதனால் மாரிகாலம் நெருங்கிவிட்டால்போதும் பிரச்சினைமேல் பிரச்சனை. துர்நாற்றம் ஒரு புறம் சண்டைகள் மறுபுறம். மொத்தத்தில் மாரியில் வீட்டைவிட்டு வெளியில் இடம்பெயர்ந்துவாழவேண்டிய துரதிஸ்டநிலை.
கடந்த 12வருடகாலமாக அங்கு நிலவிவந்த மலசலகூடக்குழிப் பிரச்சினை தொடர்பாக அங்குவாழும் பொதுமக்களால் பலஅரசியல்வாதிகளிடமும் கோரிக்கைவிடுக்கப்பட்டும் இறுதியில் தவிசாளரிடம் விடுத்த வேண்டுகோள் வெற்றியளித்திருக்கிறது.
 
அதனையொட்டிய இக்கூட்டம் நேற்று (8) தொடர்மாடி வளாகத்தில் முன்னாள் கிராமசேவை நிருவாக உத்தியோகத்தர் எம்.பாக்கியராஜா தலைமையில் நடைபெற்றது.
 
அங்கு தவிசாளர் ஜெயசிறில் மேலும் பேசுகையில்:
முதலில் தங்கள் தொடர்மாடிவீடுகளிலுள்ள சகல மலசலகூடக்குழிகளுக்கும் பதிலாக புதிய குழிகள் அமைக்கப்படவுள்ளன என்ற செய்தியைச்சொல்லுகிறேன்.அதற்கான நிதி புனர்வாழ்வு அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளது.
 
அதற்கு வித்திட்டவர்கள் புனர்வாழ்வு கொள்கைத்திட்டமில் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி ஜயா மேலதிகசெயலாளர் செந்தில்நந்தன் ஜயா ஆகியோர். அவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.
இந்தப்பிரதேசத்து வீதிகளையும் நாம் செப்பனிட்டுள்ளோம். இன்னும் 15தினங்களில் மற்றுமொருவீதியும் இங்கு கொங்கிறீற்வீதியாகவுள்ளது.நாம் வரமுன்பு காரைதீவில் ஒரு எல்ஈடி பல்பையும் பார்த்திருக்கமாட்டீர்கள்.இன்று பாhக்குமிடமெல்லாம் பல்புகள்.
கடந்த 60வருடகாலமாக தமிழ்மக்கள் அபிவிருத்தி என்றால் என்ன என்றுதெரியாமலிருந்தார்கள். பல அமைச்சுகள் அற்குள்ள அமைச்சர்கள் எந்தஇனமோ அந்தஇனத்திற்கு மட்டும் அபிவிருத்திவேலைகளைச்செய்துவருவது இலங்கையில் ஒருபோதும் ஜக்கியத்தை வளர்க்க பயன்படமாட்டாது.

Related posts