பல இடங்களில் பல வளங்கள் உபயோகப் படுத்தத் தெரியாமல் இருக்கின்றன… (இரா. சாணக்கியன்)

பல இடங்களில் பலவகைப்பட்ட வளங்கள் உபயோகப்படுத்த தெரியாமலும் அதனை பயன்படுத்துவதற்கான முதலீடுகள் இல்லாமலும் அப்படியே முடங்கி போயுள்ளன. இவையனைத்தையும் சிறந்த முறையில் பயன்படுத்தினால் மட்டக்களப்பின் வாழ்வாதாரம், பொருளாதார நிலை முன்னோக்கி செல்லும் என இராசமாணிக்கம் மக்கள் Vision for Batticaloa 2030 அமைப்பின் பிரதான ஒருங்கிணைப்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
 
இன்றைய தினம் மட்டக்களப்பில் Vision for Batticaloa 2030 எனும் அமைப்பானது அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
மட்டக்களப்பிலுள்ள புத்திஜீவிகள், பொதுமக்கள், இளைஞர்கள் இணைந்து இவ்வமைப்பினை அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளனர். இவ்வமைப்பின் பிரதான ஒருங்கிணைப்பாளராக இரா.சாணக்கியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
மட்டக்களப்பு மாவட்டம் 2030ம் ஆண்டில் எவ்வாறு இருக்க வேண்டும் என்கின்ற விடயத்தை இவ்வமைப்பின் மூலம் தற்போது வடிவமைப்பதற்கு உள்ளனர். 
 
அதாவது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஏதோவொரு வளங்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்துவதில் பல பிரச்சினைகள் உள்ளது. அவற்றை இவ்வமைப்புக்கு இனங்கண்டு அதனை விருத்தி செய்வதற்கான அனைத்து ஆலோசனைகளையும் வழங்குவதற்கு இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 
 
தொழில் முயற்சியாளர்கள், பொதுமக்கள், இளைஞர் யுவதிகள் அனைவரும் தங்கள் ஆலோசனைகள் மற்றும் திட்டங்களை குறித்த அமைப்பின் முகப்புத்தக பக்கதினூடாக கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் முகநூல் பக்கம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
நான் ஆரம்பக்கல்வியின் பின்னர்  அவுஸ்ரேலியாவில் கணக்காளாராக பணி செய்து வணிகத்துறையில் பட்டம் முடித்து 2013ம் ஆண்டு மட்டக்களப்பிற்கு வருகை தந்தேன்.  கடந்த ஏழு வருடங்களுக்குள் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் விஜயம் செய்துள்ளார். பல இடங்களில் பலவகைப்பட்ட வளங்கள் உபயோகப்படுத்த தெரியாமலும் அதனை பயன்படுத்துவதற்கான முதலீடுகள் இல்லாமலும் அப்படியே முடங்கி போயுள்ளன. இவையனைத்தையும் சிறந்த முறையில் பயன்படுத்தினால் மட்டகளப்பின் வாழ்வாதாரம், பொருளாதார நிலை முன்னோக்கி செல்லும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும், இவ்வமைப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டதும் எமது மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்க வேண்டும் எனவும்  தெரிவித்தார்.

Related posts