பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சுவிஸ் உதயம் பல்வேறு உதவிகளைச் செய்துவருகின்றது

பல வழிகளிலும் பாதிக்கப்பட்டு இருக்கின்ற எமது சமூகத்தினை  முன்னேற்றும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களை  செய்யவேண்டியதாக இருக்கின்றது அவ்வாறன வேலைத்திட்டங்களை  அனைவரும் ஒன்றிணைந்து ஆரம்பித்தால் சமூகத்தினை ஓரளவுக்கு முன்னேற்றமுடியும் என சுவிஸ் உதயத்தின்  பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் தெரிவித்தார்

பட்டிருப்பு கல்விவலயத்திற்குட்பட்ட அதிகஷ்டப் பாடசாலையான மண்டூர் 39 செல்வாநகர் நவகிரி அ.த.பாடசாலை மாணவர்களுக்கு 28 ஆம்திகதி வியாழக்கிழமை  சுவிஸ் உதயத்தின் எற்பாட்டில் கற்றல் உபகரணம் வழங்கிவைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு  பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்

இந்நிகழ்வில் சுவிஸ் உதயத்தின் கிழக்குமாகாணக்கிளையின் தலைவர் ஓய்வுபெற்ற பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் கிழக்குமாகாணக்கிளையின் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் பாடசாலையின் அதிபர் க.திருவருள்செல்வன் மற்றும் ; ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்

அவர் தொடர்ந்து பேசுகையில் எமது அமைப்பானது சுனாமிப்பேரலை  இடம் பெற்றபோது கிழக்குமக்களுக்கு உதவி செய்யும் நோக்கில் சுவிஸ் நாட்டில் வாழும் எமது உறவுகளால் இவ் அமைப்பு  ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து தமிழ் மாணவர்களது கல்வி முன்னேற்றத்திற்காக பல வழிகளிலும் உதவிகளை மேற்கொண்டு வந்துள்ளது இன்று அவ்வாறான பணிகளையே செய்துவருகின்றோம்.

இந்தப் பாடசாலையினை பார்க்கின்றபோது மிகவும் பின்தங்கிய பாடசாலையாக இருப்பதுடன் இப்பாடசாலையில் கற்பிக்கின்ற ஆசிரியர்கள் நீPண்ட தூரத்தில் இருந்து வருகைதந்து கற்பிக்கின்றனர் அதுமட்டுமல்ல ஆண் ஆசிரியர்கள் மாத்திரம்   கடமையாற்றுவதுடன் எவ்வித பெண் ஆசிரியர்களும் இல்லாத நிலையில் இப்பாடசாலை சிறப்பாக இயங்கி வருகின்றமை பாராட்டுக்குரியது  இவ்வாறான பாடசாலை மாணவர்களுக்கு நாம் அனைவரும் உதவுவதற்கு முன்வரவேண்டிய கடப்பாடு இருக்கின்றது.

இப்பாடசாலையில் 134 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர் இதில் பெற்றோரை இழந்த மற்றும் பெற்றோர்களால் கைவிடப்பட்ட மாணவர்களுக்கு இவ் உதவி வழங்கிவைக்கப்பட்டது.

இந்த உதவியினை வழங்கிவைத்த சுவிஸ் உதயத்தின் தலைவர்  செயலாளர் பொருளாளர் நிருவாகசபை உறுப்பினர்கள் அத்தோடு கிழக்குமாகாணக்கிளையின் தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் நிருவாகக் குழுவிற்கும்  அதிபர் நன்றிகளைத்தெவிவித்துள்ளார்

Related posts