பாதிப்படைந்த பிரதேசங்களை இனம் கண்டு அபிவிருத்தி செய்வதே நோக்கம் பட்டிருப்பு தொகுதி ஐ.தே.க அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி

ஆட்சியில் இருக்கும் இந்த நல்லாட்சி அரசாங்கம் கட்சி இனமத பேதமின்றி மக்களுக்கு தங்களது சேவைகளை செய்து வருவது மிகவும் வரவேற்கத்தக்க விடயம். கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்து வந்த அரசு பக்கச்சார்பான முறையில் அபிவிருத்திகளையும் தொழில் வாய்ப்புக்களையும் செய்து வந்தது. அண்மையில் எமது நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழபத்தினால் எமது மக்களுக்கான அபிவிருத்தி பணிகள் தாமதமடைந்தது இந்த நிலமை தற்போது நல்ல நிலமைக்கு வந்துள்ளது. என பட்டிருப்பு தொகுதியின் ஐக்ககிய தேசியக் கட்சியின் பிரதம அமைப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான சோ.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டுக்கழகத்தினருக்கு இரண்டறை இலட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கழத்தலைவர் இ.மதன் அவர்களின் தலைமையில் குருக்கள்மடம் கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தில் நேற்று மாலை இடம் பெற்றது. இந்நிகழ்வினை சிறப்பிற்கும் முகமாக முன்னாள் பிரதியமைச்சரும் பட்டிருப்புத் தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதம அமைப்பாளருமான சோ.கணேசமூர்த்தி மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் வில்வரெத்தினம் சிவப்பிரியா ஆகியோர் பிரதம அதிதிகளாகவும் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான லாவண்ணியா சிறிதரன்இகே.தவராணி ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச சபை வட்டார உறுப்பினர் இளையதம்பி மற்றும் கழக உறுப்பினர்கள் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

எதிர்வரும் காலங்களில் மிகவும் பாதிப்படைந்த பிரதேசங்களை இனம் கண்டு அப்பிரதேசங்களுக்கும் மக்களுக்கும் அபிவிருத்திகளை செய்வதே எனது நோக்கம்.இந்த தேசிய அரசாங்கம் எதிர்வரும் 2020ஆம் ஆண்டுவரை ஆட்சியில் இருக்கும் இந்த அரசாங்கத்தினை எவராலும் அசைக்க முடியாது இந்த அராசாங்கம் எமது மக்களுக்காகவே இன்றும் எதிர்வரும் காலங்களிலும் சேவையாற்ற இருக்கின்றது. கடந்த காலங்களில் நான் பிரதியமைச்சராக இருக்கின்ற காலத்தில் எனது அமைச்சில் போதிய நிதியிருந்தும் இப்பிரதேசங்களை என்னால் அபிவிருத்தி செய்ய முடியாமல் போய்விட்டது. காரணம் கொடிய யுத்தமே இப்பிரதேசங்களுக்கு வந்து செல்வதற்கு எமக்கு பாதுகாப்பு பிரச்சனைகள் இருந்தது இருந்தாலும் அதிகமான நிதிகளை கொண்டு எழுவான்கரை பிரதேசங்களை என்னால் அபிவிருத்தி செய்ய முடிந்தது.

அரசியல் வேறு அபிவிருத்தி வேறு அரசியல் என்பது தேர்தல்காலங்களில் மாத்திரம் பேசப்படுகின்ற விடயம் அபிவிருத்தியென்பது மக்களுக்கு தொடர்ச்சியாக கட்சிபேதமின்றி மேற்கொள்ளப்படுகின்ற விடயம்.இந்த குருக்கள்மட பிரதேசத்திற்கு என்னால் எவ்விதமான அபிவிருத்திகளையும் உதவிகளையும் செய்யவில்லை என்ற கருத்து இருந்து வருகின்றது அந்த வகையில் இங்குள்ள இளைஞர்இயுவதிகளின் விளையாட்டுத் துறையினை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்கு இரண்டறை இலட்வம் ரூபாவினை வழங்கியுள்ளேன். எதிகாலங்களில் இக்கிராமத்தின் தேவகளை இனம் கண்டு அபிவிருத்திக்கான நிதியினை பெற்றுக்கொடுப்பேன் எனத் தெரிவித்தார்.

Related posts