பிரதிக்கல்விப்பணிப்பாளர் முத்தையா விமலநாதன் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்

ஓய்வு பெற்ற பிரதிக்கல்விப்பணிப்பாளர் முத்தையா விமலநாதன் அகில இலங்கை சமாதான நீதவானாக அண்மையில்  மாவட்ட நீதிபதி கருணாகரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்

இவர் மட்டக்களப்பு மண்டூர் 1 ஆம் பிரிவைச் சேர்ந்த இவர் தற்போது கல்லடிக்கிராமத்தில் வசித்துவருகின்றார் பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பட்டதாரியான இவர்  ஆசிரியராக நுவரெலியா ரம்போடை தமிழ் மகாவித்தியாலயத்திலும் கடமையாற்றியதுடன் பின்னர் பட்டிருப்புக்கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பலவத்தை அ.த.பாடசாலை ,மண்டூர் இராமகிருஷ்ணன் மிஷன், மண்டூர் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கடமையாற்றியதுடன்; போரதீவுப்பற்றுக் கோட்டக்கல்வி அதிகாரியாக கடமையாற்றி இறுதியாக பட்டிருப்புக் கல்வி வலயத்தில் பிரதிக்கல்விப்பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

இவர் சுவீஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் தலைவராக பலவருடகாலமாக இருந்து ஏழைமாணவர்களது கல்வி முன்னேற்றத்திற்கு  உதவிசெய்து வருவதுடன் மண்டூர் இந்து இளைஞர் மன்றத்தின் செயலாளராகவும் கடமையாற்றி வருகின்றார்

Related posts