புதிய ஆளுநரால் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறி?

கிழக்கு மாகாணத்தில் புதிய ஆளுநரால் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாக ஒரு போதும் இடமளிக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் சூளுரைத்திருக்கின்றார்.

இதற்கமைய தமிழ் மக்கள் அவர்களின் சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக உயிர்தியாகம் செய்தோரின் வழியில் நின்று செயற்பட உறுதிபூண்டுள்ளதாகவும் யோகேஸ்வரன் அறிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் கடந்த காலங்களில்செயற்பட்டதாக குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காயிருந்த எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு மாகாணத்தில்தமிழர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் பூரண கடையடைப்பு போராட்டமும் கடந்த வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேசத்தில்நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், புதிய ஆளுநர் தமிழர்களுக்கு விரோதமான செயற்பாடுகளை முன்னெடுத்தால் அதனை அனுமதிக்க போவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts