புதுக்குடியிருப்பு மக்களுக்கு குடிநீர்வழங்குவதற்கு சுவிஸ் உதயம் அமைப்பின் செயலாளர் ராஜன் முயற்சி.


(சா.நடனசபேசன்)
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு வறிய மக்களை சந்தித்து அவர்களுக்கு குடிநீர் வசதிகளை சுவிஸ் உதயம் அமைப்பின் ஊடாக செய்து தருவதாக சுவீஸ் உதயம் அமைப்பின் பொதுச் செயலாளர் அம்பலவாணன் ராஜன் 21.09.2019 சனிக்கிழமை தெரிவித்தார்


புதுக்குடியிருப்புக் கிராமத்தில் சில பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு தனது தனிப்பட்ட நிதி உதவியினையும் ஒருசிலருக்கு வழங்கினார்.


இதில் மகளீர் அணித் தலைவி திருமதி. செல்வி மனோகரும் மற்றும் திருமதி. சுஜிகலா அருள்தாஸ் மகளிர் உறுப்பினர் திருமதி. தேவதர்ஷினி அவர்களும் கலந்துகொண்டார்கள்

Related posts