புலம் பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் மக்களின் அமைப்பான சுவிஸ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பரிசளிப்பு விழா

பெரியகல்லாறு சுவிஸ் ஒன்றியத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா பெரியகல்லாறு இந்து கலசார  மண்டபத்தில் விரிவுரையாளர் கலாநிதி திருமதி.சு.வரதராஜன் தலைமையில் நடைபெற்றது.
பெரியகல்லாற்றில் இருந்து புலம் பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் மக்களின் அமைப்பான சுவிஸ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வருடா வருடம் கிராமத்தைச் சேர்ந்த  க.பொ.த (சா.த) பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களும், க.பொ.த (உ.த) பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகிய  மாணவர்களும் இதன் போது பரிசீல்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களின் கல்விக்கு உதவும் வகையில் வைப்பில் இடப்பட்ட வங்கி கணக்கு புத்தகங்களும் இதன் போது மாணவர்களுக்கு கையளிக்கப்பட்டது
பெரியகல்லாற்றில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 60 மாணவர்கள் இந் இந்த பரிசளிப்பு விழாவின் போது கொளரவிக்கப்பட்டனர். இந் நிகழ்வில் மட்டக்களப்பு வைத்திய அதிகாரி வாமதேவன் பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் அதிபர் பேரின்பம் பெரியகல்லாறு விநாயகர் வித்தயாலயத்தின் அதிர் முருகானந்தம் ஆகியோர் இந் நிகழ்வில் அத்திகளாக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்..

Related posts