பெரும்போக நெல்லை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை

பெரும்போகத்தில் கொள்வனவு செய்யப்படும் நெல் சந்தைக்கு விநியோகிப்பதற்கான பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இடை தரகர்கள் இன்றி சிறிய மற்றும் பாரியளவிலான வர்த்தகர்களுக்கு இந்த நெல்லை தற்பொழுது கொள்வனவு செய்ய முடியும் என்று நெல் சந்தைப்படுத்தும் பதில் தலைவர் திஸ்ஸ விஜயகோன் தெரிவித்துள்ளார்.

பெரும்போகத்தில் 48,000 மெற்றிக்தொன் நெல்லை நெல் கொள்வனவு சபை கொள்வனவு செய்துள்ளது. இந்த நெல் மாவட்ட செயலாளர்களுக்கு உட்பட்ட வகையில் இருப்பதுடன் இவற்றை விநியோகிப்பதற்கு அவர்கள் விலை மனுக்களை கோரியிருப்பதாக பதில் தலைவர் கூறினார்

மாவட்ட செயலாளர்களை சந்தித்து விரைவாக தமக்கு தேவையான நெல்லை கொள்வனவு செய்யுமாறு வர்த்தகர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts