பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்: கனிமொழி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்யாதது வேதனை அளிப்பதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உட்பட 7 பேர், கடந்த 27 ஆண்டுகளாக வேலூர் மத்திய சிறையில் உள்ளனர்.

அங்கு அவர்கள் மிகவும் கொடுமையான தண்டனையை அனுபவித்து வருகிறார்கள். எனவே, கருணை அடிப்படையில் இந்த 7 தமிழரையும் விடுதலை செய்ய வேண்டும் என பல நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, இவர்களை விடுவிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது. ஆனால் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து வருகிறது.

இந்நிலையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.

எனவே 27 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனிமொழி கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts