பேரினவாத கட்சிகளினாலே தமிழர்களுக்கு குரல்கொடுக் முடியாது. கவீந்திரன்.கோடீஸ்வரன்

பேரினவாத கட்சிகளினாலே தமிழர்களின் தீர்வுகளுக்காக குரல்கொடுக்க முடியாது  என தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்கள்  தெரிவித்தார்.

தேசிய, மாகாண மட்டத்தில் கல்வி ,கல்விசாரா இணைபாடவிதான செயற்பாடுகளில் சாதனைளை நிகழ்த்திய மாணவர்களுக்கான   சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு இன்று காலை  சது / விவேகானந்த மகா வித்தியாலய கலையரங்கில் 15ம் கிராமம் ஸ்ரீ முருகன் சன சமூக நிலையத்தின்  ஏற்பாட்டில்   அதிபர் க.பேரானந்தம் தலைமையில்  இடம்பெற்றன.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள்;  தமிழர்களின் உரிமைக்காகவும் இருப்புக்காகவும் போராடிவருகின்ற ஒரே ஒரு கட்சி வீட்டுக்கட்சி மாத்திரமே தவிர ஏனைய பேரினவாத கட்சிகளல்ல.
தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை பேரினவாத கட்சிகள் புறந்தள்ளி ஒதுக்கியுள்ளன. எமது மக்களின் உரிமை, தேவைகள் நிராகரிக்கப்பட்டு மறுக்கப்பட்டுள்ளன. அவ் உரிமைகளை மீட்டெடுக்க போராடுகின்ற வீட்டுக்கட்சியை நாம் ஒவ்வொருவரும் பலப்படுத்த வேண்டும்.
ஒடுக்கப்பட்ட மக்கள் நியாயமான முறையில் உரிமைகளை வென்றெடுக்க கல்வியை மிகப்பெரிய  ஆயுதமாக பயன்படுத்தவேண்டும். மாமனிதர் நெல்சன் மண்டேலா கறுப்பின மக்கள் ஒடுக்கப்பட்டு நசுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடினார். அப்போது கல்வியைத்தான் ஆயுதமாக்கி மக்களையும் தெளிவு படுத்தி வெற்றியும் கண்டார்.அதே நிலைதான் இன்று தமிழ் மக்களுக்கு ஏற்ட்டுள்ளது. 
30 வருடங்களுக்கு முன் அரச திணைக்களங்களிலும், நிருவாகங்களிலும் பெரிய பெரிய பதவிகளை வகித்து நாட்டையே நிருவாக ரீதியாக ஆட்சி செய்தவர்கள் தமிழர்கள். அந்த நிருவாக திறமை ஒவ்வொரு தமிழர்களிடமும் இருக்கின்றது. அதை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.
சமூகத்தில் மாற்றம் ஏற்படும் என்றால் அது கல்வியினால்தான் ஏற்படும்.பிரதேசங்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துகின்ற பிரதான காரணியாக கல்வி மிளிர்கின்றது. கல்வியுடன் சேர்த்து ஒழுக்கத்தையும் வழங்க வேண்டும். இன்று எம்மிடமுள்ள மிகப்பெரிய  சொத்து கல்வி மாத்திரமே என தெரிவித்தார்.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும்,  கௌரவ அதிதிகளாக முன்னைநாள் கிழக்குமாகாண சபை உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளருமாகிய தவராசா கலையரசன் அவர்களும், சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர்            எம்.எஸ்.எஸ். நஜீம் அவர்களும்,கோட்டக்கல்விப்பணிப்பாளர் எஸ். சரவணமுத்து அவர்களும், பாடசாலையின் முன்னாள் அதிபரும் கல்முனை மாநகரசபையின் உறுப்பினர் பொன். செல்வநாயகம் அவர்களும்,அதிதிகளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வின் கதாநாயர்களாகிய சாதனையாளர்கள்,மாணவர்கள், ஆசிரியர்கள்,பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர்,பொது அமைப்புக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Related posts