மக்களை அச்சுறுத்திய காட்டு யானை பிடிபட்டது

(எஸ்.குமணன்)

 

அம்பாறை  மாவட்டத்தில் உள்ள உஹன பிரதேச செயலக எல்லையில் வசிக்கும்  மக்களை அச்சுறுத்தி  வந்த  காட்டு யானையை வனவிலங்கு அதிகாரிகள்  பிடித்துள்ளனர்.
 
  கொணாகொல்ல பகுதியில்  இன்று(22)  அதிகாலை பெரும் முயற்சி செய்து குறித்த காட்டுயானையை    மயக்க  ஊசி   செலுத்தி
 பின்னர் குறித்த யானை கனரக வாகனம் மூலம்  ஹோராவபொத்தானை யானைகள்  பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
 
  வனவிலங்கு அதிகாரிகள்  மூன்று நாட்கள் காத்திருந்து   பிடித்த  காட்டு யானையினால்   கடந்த வாரம் சுகதகம கிராமம்  உகண திஸ்ஸாபுர பிரதேசங்களில்     இருவர்  கொல்லப்பட்டனர்.மற்றுமொருவர்  ராஜகம பகுதியில்   தாக்கப்பட்டிருந்தார்.
 
இந்த காட்டு யானையின் அட்டகாசம்  காரணமாக  வீரகொட  திஸ்ஸபுர மற்றும் சுகதகம பகுதிகளில் மக்கள் அச்சத்துடன்  காணப்பட்டனர்.
 
 கிழக்கு வனவிலங்கு பணிப்பாளர்  எச்.ஜி.  விக்ரமதிலகவின் மேற்பார்வையில்   பிடிபட்ட குறித்த யானையை   வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் கால்நடை மருத்துவர் ஆனந்த தர்மகீர்த்தி மற்றும் அகலங்கா பினிதிய  ஆகியோர் இந்த யானைக்கு மருத்துவ உதவி வழங்கினர்.

Related posts