மக்கள் தமது சேவைகளை சுகாதார நிலையங்களில் பெற்றுக்கொள்ளமுடியும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார சேவைகள் அனைத்தும் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் மக்கள் தமது சேவைகளை சுகாதார நிலையங்களில் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் கே.அச்சுதன் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

ஒலுவில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்தில் இருந்து கொரனா தொற்றுள்ளதாக இனங் காணப்பட்ட 28 கடற்படையினர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் பதினான்கு நாட்கள் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டதன் பின்னர் பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டு தொற்று இல்லையென்றால் அவர்கள் அனுப்பிவைக்கப்படுவார்கள்.
இதேபோன்று இலண்டனில் வந்த மட்டக்களப்பினை சேர்ந்த ஒருவர் தனிமைப்படுத்தல் நிலையில் கொரனா தொற்றுக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டு அவர் ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு மீண்டும் பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டதன் காரணமாக ஏறாவூர்ப்பகுதிக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.அவர் இங்கும் 14நாட்கள் தனிப்படுத்தப்பட்டதன் பின்னரே சமூகத்திற்குள் விடுவிக்கப்படுவார்;.இது தொடர்பில் மக்கள் எந்த பீதியும் கொள்ளத்தேவையில்லை.
தாய்சேய் நல சேவைகள்,குழந்தை நல சேவைகள்,தடுப்பூசி வழங்கும் சேவைகள் உட்பட அனைத்து சேவைகளும் வழமைக்கு திரும்பியுள்ளது.
அத்துடன் சகலவிதமான தொற்றுநோய் தடுப்பு ஊசிகளும் போடப்படுகின்றன.கொரனா அச்சுறுத்தலுக்கு முன்பாக எவ்வாறான சேவைகள் நடைபெற்றதோ அதேசேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 

அனைத்து பொதுமக்களும் உரிய பொதுச்சுகாதார மாதுக்கள்,சுகாதார வைத்திய அதிகாரிகளை தொடர்புகொண்டு  வழமையாக பெறும் சிகிச்சைகளை அந்ததந்த நிலையங்களில் பெற்றுக்கொள்ளமுடியும்.

Related posts