மடத்தடி மீனாட்சியம்மன் ஆலயம் நள்ளிரவில் உடைப்பு! வாள்களுடன் வந்த நால்வரின் கைவரிசை

நிந்தவூர் மாட்டுப்பழை மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் நேற்று நள்ளிரவு விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளது.
 
ஆலயமுன்கதவிலுள்ள இரும்புப்பட்டத்திலுள் 5பூட்டுக்கள் உடைக்கப்பட்டு வீசப்பட்டுள்ளதுடன் பட்டமும் சேதப்படுத்தப்பட்டுள்துளது.
 
இதுதொடர்பாக ஆலயநிருவாகம் சம்மாந்துறைப் பொலிஸில் முறைப்பாடு செய்தமையையடுத்து பொலிசார் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
 
சோழர்காலத்து ஆலயமான இம் மீனாட்சி அம்மன் ஆலயம் ஏலவே ஒருதடவை இவ்வாறு உடைக்கப்பட்டமை தெரிந்ததே. 
 
இலங்கையிலுள்ள ஒரேயொரு மீனாட்சிஅம்மன் ஆலய  இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
 
நள்ளிரவில் போதையில் வாள்களுடன் வந்த நான்கு நபர்களின் கைவரிசையே இது என்று சொல்லப்படுகின்றது.
 
நேற்றிரவு ஆலயபாதுகாப்புக்கடமையிலிருந்த காவலாளி யோகராசா(வயது 55) கூறுகையில்;:
 
இரவு நான் தனியாகவே புது ஆலயத்தினுள் படுத்திருந்தேன். இரவு 12மணியளவில் நாய்கள் குரைக்கும் வழமைக்குமாறான சத்தம் கேட்டு கண்விழித்தேன்.
 
உடனே எழுந்து நாய்கள் குரைக்கும் பக்கம் வந்தேன். அங்கு பழைய ஆலயமருகே நான்கு இளம் நபர்கள் கைகளில் வாள்களுடன் நிற்கக்கண்டேன்.இருவர் சிவப்பு நிற ரீசேட் அணிந்திருந்தது தெரிந்தது.
 
என்ன இங்கே நிற்கிறீர்கள்? என்றுகேட்டேன். நாம் சும்மா நிற்கிறோம் என்றனர். அப்போது வாயில் சாராய வாடை அடித்தது.
 
நான் பயத்தில் நின்றேன். அவர்கள் பின்பக்கமாகச் சென்றார்கள். பின்புதான் பார்த்தேன் ஆலய கதவு பூட்டு உடைக்கப்பட்டு வீசப்பட்டிருந்தன.
5பூட்டுக்கள் உடைக்கப்பட்டிருந்தன. 4பூட்டுக்கள் அதே இடத்தில் கிடந்தன. ஒரு பூட்டு தூர வீசப்பட்டிருந்தது. என்றார்.
 
ஆலயமுன்னாள்உபதலைவரும் காரைதீவு பிரதேசசபை தவிசாளருமான கே.ஜெயசிறில் அங்கு சமுகளித்து கூறுகையில்:
 
எமது ஆலயம் முன்பொருதடவையும் இவ்வாறு உடைக்கப்பட்டது. ஆனால் இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை. அதனிடையில் மற்றுமொரு உடைப்பு இடம்பெற்றுள்ளது. இது ஒட்டுமொத்த இந்துக்களை புண்படுத்தியுள்ளது.
 
பொருளாதாரம்வளம் மிகக்குறைவான நிiலிலுள்ள இந்த ஆலயம் மக்களின் ஒத்துழைப்பால் அருகில் புதிய ஆலயம் அமைக்கப்பட்டு விரைவில் கும்பாபிசேகம் காணவிருக்கின்ற இந்தவேளையில் இந்தத்துர்ச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை இந்துக்கள் மத்தியில் பலத்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
 
எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களை தடுக்கவேண்டுமாயின் இங்கு பாதுகாப்புக் கமராக்கள் பொருத்தப்படவேண்டும். ஆனால் ஆலயத்தில் நிதியில்லை. எனவே நிதிவளம்மிக்கவர்கள் தனவந்தர்கள் சிசிரிவி கமரா பொருத்துவதற்கு உதவவேண்டும்.
 
இலங்கையில் ஆலய உடைப்பென்பது புதிய விடயமல்ல. ஆலயம்உடைக்கப்படுவது தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றது. அதற்கான கடுமையான தண்டனை வழங்கப்படாமையும் குறித்த நபர்களை கைதுசெய்யாமையுமே ஆகும்.
எனவே பொலிசார்  தன்வேலையை இதயசுத்தியுடன் செய்து சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின்முன் நிறுத்தவேண்டும். ஆலயத்திற்கு நீதிபெற்றுக்கொடுக்கவேண்டும் என்றார்.
 
ஆலய பரிபாலனசபைத்தலைவர் கோ.கமலநாதன் கூறுகையில்:
அதிகாலை 5.30மணியளவில் ஆலயத்திற்கு அருகிலுள்ள தென்னங்காலை உரிமையாளர் யூசுப் தொலைபேசியில் ஆலயம் உடைக்கப்பட்ட செய்தியைச்சொன்னார். நான் உடனே நிருவாகசபை உறுப்பினர்களுக்கும் ஆலோசகர்களுக்கும் கூறிவிட்டு ஆலயத்திற்கு வந்தேன். பின்பு பொலிசில் முறையிட்டுள்ளேன். சம்பந்தப்பட்டவர்களை  அம்பாள் பாhத்துக்கொள்வாள். என்றார்.
சம்பவம் கேள்வியுற்றதும் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்ட பல இந்து பிரமுகர்கள் வந்து பார்வையிட்டனர்.

Related posts