மட்டக்களப்பில் எந்த இடத்திலும் கொறானா வைரஷ் நோயாளர்களை அனுமதிக்கமுடியாது! பா.அரியநேத்திரன்,மு.பா.உ.

தற்போது சீனாவில் வெகுவாக பரவிவரும் கொராணா வைரஷ் நோயானது உலகில் பல இடங்களிலும் காணப்படுவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் அவ்வாறான நோய் உள்ளதாக கண்டறியப்பட்டால் அவர்களை மட்டக்களப்பு மாந்தீவில் தங்கவைத்து சிகிச்சை செய்யலாம் என அரசினால் முடிவுகள் எடுக்கப்பட்டதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.
அப்படியான முடிவுகள் உண்மையானால் மட்டக்களப்பு மக்களை ஒன்றுதிரட்டி இதற்கு எதிரான மிகப்பெரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்துவோம் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் கொராணா வைரஷ் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைதரும் பிரயாணிகள் மற்றும் சுற்றுலா பிரயாணிகள் மூலமே பரவுவதற்கு வாய்புகள் உள்ளன.
அவ்வாறானவர்களை கண்காணிக்க ஏற்கனவே கட்டுநாயக்கா விமானநிலையத்தில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்புகள் இடம்பெறுகின்றன அப்படியான நோய் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டால் கொழும்பு தலைநகரில் பொருத்தமான ஒரு மருத்துவமனையை தெரிவுசெய்து அங்கு வைத்து சிகிச்சை செய்வதே நல்லது.
அதைவிட்டு மட்டக்களப்பு மாந்தீவு வைத்திய நிலையத்தில் அழைத்துவந்து சிகிச்சை செய்வது மட்டக்களப்பு மாவட்ட மக்களை அவமதிக்கும் செயல்மட்டுமன்றி மட்டக்களப்பு மக்களை திட்டமிட்டு்நோயாளார்களாக மாற்றும் ஒரு சதிகாரச்செயலாகவே இதனை நாம் பார்கிறோம்.
இந்த விடயம் உண்மையானால் சம்மந்தப்பட்ட சுகாதார அமைச்சு உடனடியாக அவ்வாறான எண்ணத்தை கைவிட்டு பொருத்தமான ஓர் தலைநகரான கொழும்பை அண்டிய பிரதேசங்களில் ஒரு வைத்திய நிலையத்தை தெரிவுசெய்வதே சாலவும் பொருத்தமானதாகும்.
அப்படிசெய்யாமல் மட்டக்களப்பு மாந்தீவு வைத்தியசாலைக்கு கொராணா வைரஷ் நொயாளர்களை சிகிச்சைக்காக அழைத்து வர திட்டமிட்டால் மக்களை அணிதிரட்டி மிகப்பெரிய கவன ஈர்ப்பு போராட்டம் மேற்கொள்வதை தவிர வேறு வழி இல்லை எனவும் மேலும் கூறினார்

Related posts